Monday, September 27, 2010

உயிரே...

 காலையில் என் இரு சக்கர வாகனத்தில் என் நண்பருடன் அவரது அலுவலகத்துக்கு சென்று அலுவலக வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று அமர்ந்தோம்அது ஒரு முக்கியமான  போக்குவரத்து சாலை சாலையின் ஓரத்திலேயே அலுவலகம் இருந்தது  திடீரென்று ஒரு சத்தம் கேட்டது  சிலர் வேகமாக சிலர் ஓடினார்கள்  என்ன நடக்கிறது கூட்டமாக இருக்கிறது என்று சென்று பார்த்தால் அங்கே ஒருவர் அடிபட்டுகிடக்கிறார் அவர் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் ஏதோ ஒரு வாகனம் இடித்து சென்றுவிட்டது நாற்ப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே கிடக்கிறார் அவர் வாயிலிருந்து இரத்தம் வருகிறது அவரிடம் எந்த அசைவும் இல்லை, அவரை சுற்றி கூட்டம் கூடியதே தவிர யாரும் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று யாருமே நெருங்கவில்லை நான் நேராக அவர் மூக்கின் அருகே என் விரலை வைத்துப் பார்த்தேன் உயிர்  இருக்கிறது
என்று தெரிந்தவுடன் என் நண்பனிடம்உடனே போன் செய்தால் அவரைகாப்பாற்றிவிடலாம் என்று கூறிக்கொண்டே நேராக அலுவலகம் சென்று ஆம்புலன்சுக்கு போன் செய்து விஷத்தை கூறினேன் ஆனால் அவர்கள் சொன்ன பதில் நாங்கள் பக்கத்துக்கு ஊருக்கு முதல்வர் வந்திருப்பதால் அங்கிருக்கிறோம் நிகழ்ச்சி முடிந்தவுடன் வருகிறோம் என்று சர்வ சாதரணமாக கூறினார்கள்   அடுத்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்டால் அதே பதில் ,அடுத்து  காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டால் அங்கிருந்து வந்த பதிலும் அதே தான் சரி இப்பொழுது என்ன செய்வது நாம் எடுத்து சென்றாலும் பிரச்சினையை சந்திக்கவேண்டும் நம் நாட்டு சட்டம் தான் மிக அருமையாக உதவி செய்பவர்களே குற்றவாளிகளாக தண்டிக்கப்படும் நிலைமை உள்ளதே என்று ஒரு இரண்டு நிமிடம் யோசித்துவிட்டு மாவட்ட காவல் துறை ஆணையாளருக்கு தொடர்பு கொண்டேன் அவருடைய தொடர்பு உடனடியாக கிடைத்தது அவரிடம்  விளக்கத்தை சொன்னவுடன் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார் ,பத்து நிமிடம் கழிந்தது எதுவும் வரவில்லை அவரும் அதே விழாவில் தான் இருந்தார் இன்னும் பத்து நிமிடம் பார்ப்போம் என்று மீண்டும் அவர் விழுந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தோம் அவர் பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றும் பீடி கட்டு ஒன்றும் அந்த இரத்ததின் அருகில் முன்னர் பார்க்கும்போது கிடந்தது அதைக் காணவில்லை அடக் கொடுமையே இப்படியும் சில பிறவிகளா ,ஒரு உயிர் துடித்துகொண்டிருக்கிறது அதை பற்றி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இதைக்கூட திருடும் மனிதமிருகம் இந்த பூமிக்கு தேவையா என்று மனது கனத்தது அந்த சமையத்தில் சைரன் ஒலி கேட்டது சரி வந்துவிட்டார்கள் என்று ஒரு நிம்மதி எப்படியாவது அந்த உயிர் காப்பற்றபடவேண்டும் என்ற கவலை மறுபுறம் வாகனம் வந்து நின்றவுடன் இறங்கி வந்தவர் நேராக கூட்டத்தை பார்த்து கேட்ட முதல் கேள்வி யார் போன் செய்தது என்று தான் இதிலிருந்து என்ன தெரிகிறது சாதாரண நிலையில் இருக்கும் மனிதனின் உயிர் ஒரு வசதி படைத்த வீட்டில் இருக்கும் நாயின் உயிரைவிட மதிப்பு குறைவானது தான் என்று எங்களுக்குள் கூறிக்கொண்டு அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை அவர் திட்டிக்கொண்டே அவரை எடுத்து சென்றனர் பின்னர் அவர் காப்பற்றப்பட்டாரா இல்லையா என்று தெரிந்துகொள்வதர்க்காக நாங்களும் ஒரு மணி நேரம் கழித்து அரசு பொது மருத்துவமனைக்கு சென்று விசாரித்து பார்த்தபோது காப்பாற்றப்பட்டார் என்று தெரிந்தவுடன் அளவுகடந்த மகிழ்ச்சியாய் இருந்தது ஆனால் இந்த அதிகாரிகளுக்கு ஏன் இப்படி மனம் கல்லாகிவிட்டது ஒரு முதலமைச்சரின் உயிர் அமைச்சர்கள் உயிர்  அதிகாரிகள் உயிர் மக்களின் உயிர் என்று உயிர்களில் ஏதேனும் வித்தியாசம் உண்டா ஒரு தடவை தான் இந்த மனிதப்பிறப்பு ஒரு முறை இந்த உடலில் இருந்து பிரிந்துவிட்டால் அந்த மனிதனை சார்ந்த எத்தனை உறவுகள் பாதிக்கப்படுகிறது என்று அவரவர்கள் அனுபவிக்கும் போது புரியும் சாதரணமாக பேசும்போது அதன் வேதனை தெரியாது தயவு செய்து ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள் உயிரின் மதிப்பு இவ்வளவுதானா ?..........................?.....................?இதை படிப்பதோடு இல்லாமல் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்,அது மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்.........இன்னும் தொடரும்

Saturday, September 25, 2010

ஆகஸ்ட் 15

ன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள், ஒவ்வொரு வருடமும் நாம் அடிமை வாழ்க்கையில் இருந்து மீண்ட நன்நாள் ஆகஸ்ட் மாதம் 15 தேதி,ஆனால் அந்த நாளை நாமெல்லாம் கொடியேற்றி இனிப்பு வழங்கும் விழாவாக மட்டுமே கொண்டாடுகிறோம் இரத்தம் சிந்தி தன் உயிர்களை விட்டு பல கொடுமைகளை அனுபவித்து தன் உயிர்களை விட்ட நம் முன்னோர்களுக்கு நாம் நன்றி உரைப்பதைக்கூடமறந்துவிட்டோம் ஏனென்றால் அவர்கள் எல்லாம் யார் என்றே இப்பொலுது பல பேர்களுக்கு தெரியாது அந்த அளவுக்கு நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம்,தன்னுடைய பிள்ளைகள் ஆங்கில பள்ளியில் தான் படிக்கவேண்டும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலைக்கு அனைவரும் வெளிநாட்டு மோகத்தில் ஊறிப்போய்விட்டார்கள் உங்களுக்கு இந்த நிலைகிடைத்தது யாரால் தன் விருப்பம் போல் நடக்கும் அளவுக்கு உரிமை கிடைத்தது எப்படி இது இப்ப்பொழுது பலருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை என்னும்அளவுக்குதெரியாதவிசயமாகஆகிவிட்டது நாமெல்லாம் இன்று தன் சொந்த இடத்தில் வசித்துக்கொண்டு இது என் வீடு என் குழந்தைகள் என் தொழில் எனது எனது எனது என்று தன் சுயநல வாழ்வில் ஊறிப்போய்விட்டார்கள் தன் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலைமைக்குநாம்சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ஆங்கிலவருடப் பிறப்பிற்கு  கொடுக்கும் ஒரு மரியாதையைக் கூட நம் சுதந்திர தினத்திற்கு கொடுப்பதில்லை ,அன்று ஒரு நிமிடம் நம் முன்னோர்களை நினைக்கும் நாளாக கூட அதை செய்யமறுக்கிறோம்,அன்றைய தினம் நம் தொலைகாட்சி முன்பு அமர்ந்து நிகழ்சிகளை பார்ப்பதுதான் நம் சுதந்திரதினம் கொண்டாடுவது ,ஒரு நடிகருக்கு உடல் நிலை சரியில்லைஎன்றால் உடனே பதறிவிடுவோம் ஆனால் நாட்டு எல்லையில் ஐம்பது ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பது ஒரு செய்தியாய் மட்டுமே நாம் நினைப்போம் ,ஒரு நடிகைக்காக கோவில் கட்டுவோம் ,நடிகனுக்காக பாலாபிசேகம் செய்வோம் ரோட்டில் ஒருவர் அடிபட்டு துடித்து கொண்டிருந்தால் அதை வேடிக்கை பார்த்துவிட்டு வெகு சீக்கிரமாக அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுவோம்,                                          இத்தகைய பிழைப்பு தேவையா ?...........................................இன்னும் பல 

Thursday, September 23, 2010

எதை நோக்கி செல்கிறது?

இந்தியா இந்த நாட்டில் நாம் பிறந்ததற்கு பெருமையாக இருக்கிறது அதுவும் இந்த தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்ததிற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ,நம் தமிழ் மக்கள் இல்லாத உலக நாடே இல்லை என்றும் சொல்லூம் அளவுக்கு நம் தமிழ் பெருமை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது வந்தாரை வாழவைக்கும் பூமி நம் தமிழ் நாடு,ஆனால்  இந்த பூமியில் இன்று தன் வீட்டு தன் தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட அதை அப்படியே விட்டுவிட்டு தனக்கு  பிடித்த நடிகரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட செல்கிறான்,விருந்தோம்பலுக்கு பெயர் போன நம் தமிழ் மண் இப்பொழுது மதுபானக் கடைகளில் அழகாக நடந்துகொண்டிருக்கிறது இப்பொழுது நம் பத்து ரூபாய் கூட இல்லாமல் சென்றால் மதுபானக் கடைகளில் நம் நண்பர்களின் முதல் உபசரிப்பு எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துக்கொள் நான் பணம் கொடுத்துக் கொள்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள் ஆனால் நம் வீட்டில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை ஒரு நூறு ரூபாய் கடனாகக் கொடு என்று கேட்டால் அடுத்த நிமிடமே அவர்கள் சொல்லும் பதில் என்கிட்டே எந்த பணம் இருக்கிறது நானே வேறொருவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று அமைதியாக சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்துவிடுவார்கள் ,அடுத்து நம் தமிழ் நாட்டு கடற்கரைக்கு உலக அளவில் பெருமையான பெயர் உள்ளது ஆனால் அந்த கடற்க்கரைகளுக்கு ஒரு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்தால் அவர்களை சுற்றி இருபது  முப்பது பேர் நின்றுகொண்டு நாய்களை போல் வேடிக்கை பார்ப்பது ஒரு மாபெரும் கொடுமை இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது  இப்பொழுதெல்லாம் பார்க்குகள் எல்லாம் காதலர்கள் என்ற பெயரில் பலர் சல்லாபிக்கும் இடங்களாக மாறிவிட்டன,கோவில் கருவறைகள் சாமியார்களின் அந்தப்புரங்களாக மாறிவிட்டது ,கல்விக்கு புகழ் கொடுத்த நாலந்தா பல்கலைக்கழகம் உருவான நம்நாட்டில் கல்வி கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன முக்கியமான ஒரு விஷயம் தமிழகத்தில் மதுபான விற்பனையில் முதலிடத்தை நோக்கி வெகுவேகமாக சென்றுகொண்டுள்ளது அதை விற்பது தமிழ் மக்களின் பாது காவலன் தமிழக அரசுதான் இப்படி ஒரு நாட்டில் பிறப்பது பெருமை தானே................................................................................................................. 

கடவுள் எங்கே?

அன்பு உள்ளங்களுக்கு என் அன்பான வணக்கங்கள் இது ஒரு பெரிய விஷயம் தான் ஆனால் இதை வெளிப்படுத்தாமல் என்னாலும் இருக்க முடியவில்லை அன்பே கடவுள் இந்த தலைப்பு பலபேர் மனதில் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது  என்னை பல நண்பர்கள் கடவுளை மற்றதோடு ஒப்பிடாதீர்கள் அவர் எல்லாவற்றிர்க்கும் மேலானவர் என்று குறிப்பிடுகின்றனர் தயவு செய்து என்னைமன்னித்துவிடுங்கள் இதை பற்றி பல மகான்கள் பல கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அந்த அளவுக்கு என்னால் கூற இயலாது ஒவ்வொருவரின் பார்வையில் பல கருத்துக்கள் இருக்கலாம் என் பார்வையில் கடவுள் என்றால் அன்பின் வெளிப்பாடே கடவுள் அதைப் பற்றி .......... 


நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய வரவில்லை கடவுள் என்றால் என்ன என்று என் பார்வையில் கடவுள் என்றாலேஒருவித மாய உணர்வுக்குள் சென்றுவிடுகிறோம் கடவுள்  என்பதன் அர்த்தமே கட+உள் என்று தான், உள்ளத்தை கடந்து பார் உன் உள்ளமே கடவுள் அந்த உள்ளத்தை உற்று நோக்கு அந்த உணர்வுகள் உங்களுக்கு வெளிப்படும் அந்த உணர்வே அன்பாக வெளிப்படும் அதுவே கடவுள் உங்கள் மனதின் வெளிப்பாடு தான் எல்லாமே, கோவிலுக்கு செல்கிறோம் அங்கு கடவுள் இருக்கிறார் என்று எதை வைத்து சொல்கிறோம் அதுவும் நம் உள்ளத்தின் உணர்வுதான்,அங்கு பல அபிசேகங்கள் பல விதமான படையல்கள் செய்கிறார்கள் இதையெல்லாம் அந்த கோவிலில் உள்ள கடவுள் எடுத்துக் கொண்டாரா சரி எடுத்துக்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம் யார் அதை பார்த்தவர்கள் கட்டாயம் யாரும் பார்த்திருக்க முடியாது ஆனால் அதை அவர் எடுத்துக்கொண்டார் என்று நம்பிக்கை நமக்கு தோன்ற வைப்பது நம் உள்ளமே நம் உள்ளத்தில் எது எண்ணங்களாக பிரதிபலிக்கிறதோ அதுவே நாம் வெளிப்படுத்துகிறோம் ஆகா நம் உள்ளம் தான் அனைத்தும் தோன்றவைப்பது அப்ப அது தானே கடவுள் அந்த உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் அதாவது அன்பான எண்ணங்கள்  தோன்ற வைத்து நல்லதை மட்டுமே பார்க்க ,பேச ,செய்ய வைப்பது உள்ளமே,நாம் மற்றவர்களுக்கு உதவ நினைப்பதும் உதாசீனப்படுத்துவதும் ,கோபப்படுவதும் நம் மனத்தின் வெளிப்பாடே, கடவுளுக்கு இத்தனை வேறுபாடுள்ள மனிதர்களை படைத்து அவர்களின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டிருப்பவரா? ஒவ்வொருவரிடமும் நீ இப்படி செய்யாதே ,நீ அங்கே போகாதே,என்று வழிகாட்டிக்கொண்டிருக்கிறாரா  இல்லவே இல்லை அவர்களும் நம்முடன் வாழும் மனித உருவங்களாகவே வழிகாட்டுகின்றனர் எப்படிஎன்றால் குழந்தையில் தாய்,தந்தையாக,பள்ளியில் ஆசிரியராக,நல்ல நண்பர்களாக ,நல்ல உறவினர்களாக,இப்படி பல வழிகளில் நமக்கு வழிகாட்டுகிறார்கள் .........................

Wednesday, September 22, 2010

இதோ ஒரு சில வினாடிகள்

எனக்கு அறிவுரை சொல்ல தகுதி இல்லை இருந்தாலும் என் மனதில் பட்டதை வெளிப்படுத்தாமல் இருப்பது ஒரு சுமையாகவே தோன்றுகிறது நான் ஆத்திகனும் அல்ல நாத்திகனும் அல்ல நான் நல்ல பண்புடைய மனிதன் எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு அவரவர் மனதிலும் ஒரு கடவுள் இருக்கிறார் அவரை முதலில் கண்டுபிடியுங்கள் என்றே நான் சொல்லுவேன்  அவரே நம்மை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வெளிப்படுத்துகிறவர் உடனே என்னை ஆன்மீகவாதி என்று நினைத்துவிடாதீர்கள் ஒவ்வொருவரும் தன் மனத்தின் படியே வாழ நினைக்கின்றனர் அப்படியென்றால் நம்மை ஆட்டிவைப்பது நம் மனமே சரி அந்த மனது எப்படி இவ்வாறெல்லாம் நினைக்க வைக்கிறது யார் இதை செய்வது என்று தோன்றும் அதை செய்வது உங்களை சுற்றி நடக்கும் செயல்களே ,நீங்கள் அன்றாடம் பார்க்கும் செயல்கள் கேட்க்கும் செய்திகள் இவைகளே உங்கள் மனதை செயல்படுத்தும் இயந்திரங்கள் உங்கள் கண்கள் ஒரு பொருளைப் பார்க்காதவரை அதைப்பற்றிய எண்ணமே உங்கள் மனதில் தோன்றாது ஆனால் அதை பார்த்த மறு நிமிடமே நம் மனதில் பதிவாகிவிடும் அது எந்த நேரத்திலும் நம் மனக்கண்ணில் தோன்றும் அதை பற்றி பல விதமான கற்பனைகள் செய்து அதை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்ற உணர்வை வளர்ப்பது மனமே,நம் மனதில் சிறு வயதில் இருந்து நல்லவைகளை பார்த்து நல்லவர்களுடன் பழகி நல்லதையே பேசி நம் வளர்ப்பு தன்மை அமைந்திருந்தால் நம் செயல்கள் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள் ,நாம் குழந்தைப்பருவத்தில் யாரிடம் வேண்டுமானாலும் பழகுவோம் ஆனால் வயது ஏற ஏற பலரை விலக்கிவிட்டு ஒரு சிலரை மட்டுமே நாம் தொடர்பில் வைத்திருப்போம் இது எதனால் வந்த பாகுபாடு கடவுள் நம்மிடம் கூறினாரா இல்லை நம் மனமே தீர்மானிக்கிறது ஆனால் ஒரு விசயம் என்னவென்றால் எதிலும் நம் மனம் வைக்கும் நம்பிக்கை அந்த நம்பிக்கையே நம் வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கிறது ஒருசிலரின் நம்பிக்கை கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்தினால் அதன் மூலமே நமக்கு நல்லது நடக்கும் என்று அவர்கள் மனம் விரும்புகிறது அவர்கள் நினைப்பது நடந்துவிட்டால் அந்த வழிபாட்டின் மூலமே கிடைத்தது என்று நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள்,நடக்கவில்லை என்றால் அந்த வழிபாட்டின் மீதே வெறுப்பு வந்து அதை குறை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள் இதுவே...................   

Tuesday, September 21, 2010

என் தாய்

 என் தாயின் விரல்கள் என் மேனியில் தவழ்ந்த அந்த உணர்வுகள் ,அவர்களது மடியில் கொஞ்சி தவழ்ந்த நாட்கள் ,அவள் உச்சி முகர்ந்து பள்ளிக்கு அனுப்பிய நாட்கள் என் வரவை எதிர்பார்த்து வீட்டின் வாயிலிலேயே நின்றுருக்கும் என் தாய் என் முகம் பார்த்ததும் ஆயிரம் பூக்கள் ஒன்றாக மலர்ந்தது போல் அவள் முகம் மலர்ந்து தன் இரு கைகளையும் விரித்து  என்னை வாரியணைத்து முத்தமிடும் அவள் அன்பு, எனக்காக தன் கட்டிய கணவனையே இரண்டாம் பட்சமாக நினைத்து என்னையே தன் கண்களாக பாவித்து ஒரு தூசு கூட என்னை எதுவும் செய்துவிடாமல்  என்னை கட்டி காப்பாற்றிய என்தாயே இன்று தள்ளாடும் வயதில் என் கைகளை பற்றி வருடுகிறாய் அன்று என் உடலில் தவழ்ந்த அதே உணர்வு இன்றும் எனக்கு என் வயது ஏற ஏற நீ மீண்டும் மீண்டும் என்னை குழந்தையாகவே பாவிக்கிறாய் அந்த அன்பு  ஒன்றே போதுமம்மா ஆயிரம் பிறவி எடுத்தாலும் உனக்கே பிள்ளையாக பிறக்கவேண்டும் என்ற வரம் கொடும்மா எனக்கு நீயே தெய்வம் அம்மா ......................

Tuesday, September 14, 2010

இது நியாயமா?




ஏன் மனித உணர்வுகள் இப்படியெல்லாம் நடக்க வைக்கிறது நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் இது,தன் நிலை மறந்த செயல் இது இன்றைய செய்தி தாளின் முக்கிய தலைப்பு பள்ளி பஸ்மோதி மாணவர் பலி பள்ளிக்கூடம் தீ வைத்துஎரிப்பு அந்த பள்ளி பஸ் டிரைவரின் குறைபாட்டினால் நடந்ததா?அல்லது அந்த பையன் தவறுதலாக அந்த பஸ்சில் விலுந்தானா என்று முடிவு தெரியாமலே அங்கு நடந்த கொடுமை இது, அந்த பள்ளி நுழை வாயில் முன்பு கூட்டமாக கூடிய அந்த பையனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களும் அந்த பஸ்சை முதலில் அடித்து நொறுக்கினார்கள் அடுத்து செய்த செயல் அங்கிருந்த மாணவ மாணவியர்களையும் ஆசிரியர்களையும் விரட்டியடித்துவிட்டு அங்குள்ள 140 வகுப்பறையில் உள்ள அனைத்து பொருள்களையும் கணினி ஆய்வகம் அடித்து நொறுக்கியதோடு நிற்க்காமல் அதையெல்லாம் தீ வைத்தனர்  அதைவிட கொடுமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தனை ஆவணங்களுக்கும் தீ வைத்தனர் அதில் அங்கு படித்து கொண்டிருக்கும் அத்தனை பேருடைய சான்றிதழ்கள்,அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஆசிரிய-ஆசிரியைகளின் கல்வி சான்றித்ழ்கள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கினர்  மற்றும் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரின் கார் அவரது வீட்டிற்க்கும் சென்று வீட்டில் உள்ள அனைத்து பொருள்கள் ,மற்ற இடங்களுக்கு சென்றிருந்த பள்ளி பேருந்துகளையும் தேடி சென்று அடித்து தீயிட்டனர் சரி இதெல்லாம் ஒரு உயிர் போன ஆத்திரத்தில் தானே செய்துவிட்டார்கள் என்று நினைக்கலாம் ஆனால் அங்கு வேலை செய்த ஆசிரிய ஆசிரியைகள் என்ன பாவம் செய்தார்கள்,அவர்கள் வாங்கிய சான்றிதழ்கள் யார் தருவது இப்பொழுது பள்ளியை மூடிவிட்டார்கள் அங்கு படித்துகொண்டிருக்கும் மற்றவர்களின் கதி,இப்பொழுது அந்த மாணவனின் உயிர் திரும்பிவிட்டதா? சரி இது பள்ளி வாகனம் என்பதால் இத்தனை ஆர்ப்பாட்டம் இதுவே மற்ற வாகனமாக இருந்தால் இதெல்லாம் நடக்குமா?இப்படி ஆத்திரத்தில் நடந்தது தான் தர்மபுரியில் கல்லூரி பஸ்எரித்ததும் ஆனால் இன்று அது யாருக்காக நடந்ததோ அவர்களின் சுகபோக வாழ்க்கைக்காக அதை செய்தவர்கள் இன்று தூக்குகயிற்றிர்க்குஇரையாகப்போகிறார்கள்அவர்கள் இறந்துவிட்டால் மட்டும் அந்த எரிந்த பெண்கள் திரும்பிவரப்போகிறார்களா என்று நினைக்கலாம் அதுவல்ல அது போன்று மீண்டும் நடந்துவிடக்கூடாது என்றுதான் ஆனால் எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் நாங்கள் திருந்தமாட்டோம் என்று பறை சாற்றுவதாகவே இது நிகழ்ந்துள்ளது  இது நியாயமா ?

Monday, September 13, 2010

ஐயோ இது என்ன கொடுமை



ஐயோ இது என்ன கொடுமை ஏன் இப்படி யார் கொடுத்த சாபம் ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் தனக்கென்று எந்தவித உரிமையும் இல்லையா ஒவ்வொரு பிறப்பும் மற்றவர்களுக்கு அடிமையா ஏன் இந்த அடிமை வாழ்க்கை யார் கொண்டுவந்தார்கள் இந்த சட்டத்தை தவறு செய்பவர்களை மட்டுமே தண்டனை கொடுக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் உயிரை  பறிக்கவல்லவா பயன்படுகிறது நாம் நம்மை காக்க தேர்ந்தெடுக்கும் மனித ஜென்மங்கள் நம்மையே அல்லவா பலி வாங்குகிறது இதற்க்கெல்லாம் யார் காரணம் ஒவ்வொரு மனித மிருகங்களும் தன் பேராசையால் விளைந்த விபரீதங்கள் ஜாதி மதம் இனம் நிறம் என்ற வேறுபாட்டால் வந்த வெறியர்களின் அட்டகாசங்கள்   இவர்கள் செய்த பாவம் என்ன   நான் இலங்கையை மட்டும் சொல்லவில்லை ஒவ்வொரு ஊரிலும் இந்த நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு மற்ற உயிர்கள் பலியாக வேண்டிய அவசியங்கள் எதற்கு யார் கொடுத்தது தயவு செய்து ஒவ்வொருவரும் யோசிக்கவேண்டும் நாம் அடிமையாய் நமக்குள்ளே  நினைத்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அழித்துகொண்டிருக்கிறோம் எதற்கு இந்த சுதந்திரம் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் நாம் வாய் திறந்தால் உடனே அடக்குமுறை என்ற பெயரில் போலீஸ் வெறியாட்டம் ஆடிவிடுகிறது இதே உயர் மட்டத்தில் இருந்து பேசினால் அவர்களுக்கு அதே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது போலீஸ் துறை பாவம் அவர்களும் என்ன செய்வார்கள் அவர்களும் அடிமைகள் தானே உண்மையிலேயே ஒரு கொசுவுக்கு பயந்து வீட்டை மூடிக்கொள்வதை போன்று தான் நாம் செய்வதும் அந்த கொசுவை அந்த இடத்தில் இருந்து விரட்டுவதை விட்டுவிட்டு நமக்கு எதற்கு என்று ஒடுங்கி செல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளோம் ஒரு எலும்பு துண்டை இலவசமாக கொடுத்துவிட்டால் கூட நாம் அடுத்த நிமிடமே அவர்களுக்கு அடிமையாக தயாராக இருக்கிறோம் இது சமீபத்தில் நடந்தது ஒரு பெண் போலீஸ் அதிகாரி ஒரு கடைக்கு சென்று மிரட்டி பத்தாயிரம் லஞ்சமாக கொடு இல்லாவிட்டால் கடையை காலிசெய்து விடுவேன் என்று கூறுகிறார் அதே கடையில் அந்த ஏரியாவை சேர்ந்த ஒரு படித்த நபர் அவரது செல்பேசியில் அதை பதிவு செய்து அவரிடம் காட்டி இதை நான் மேலிடம் வரை சென்று காட்டுகிறேன் இதற்க்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று சொல்லுகிறார் அதற்க்கு அந்த பெண் அதிகாரி அவரின் காலை பிடித்து வேண்டாமென்று கெஞ்சுகிறார் அதையும் பதிவு செய்கிறார் உடனே மேலிடத்திற்கு தகவலும் சொல்லுகிறார் சொன்ன உடனேயே ஐந்து  நிமிடத்தில் ஒரு வாகனத்தில் ஐந்து போலீஸ் சார் அங்கு வந்தார்கள் வந்தவுடனேயே செல்பேசியில் பதிவு செய்தவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றுவிட்டார்கள் இது அத்தனையும் அவரது செல்பேசியில் பதிவாகியிருந்தது இது நம் திருப்பூர்க்கு அருகில் நடந்த ஒரு உண்மை சம்பவம் இதில் இருந்து நாம் எந்த அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது .....................இன்னும் பல உண்மைகள்  

Sunday, September 12, 2010

நிஜ வாழ்க்கை

எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என் வாழ்க்கையில் எது வேண்டுமென்றாலும் எனக்கு உடனே கிடைத்துவிடுகிறது அவ்வளவு வசதியான குடும்பம் என்று ஒவ்வொரு பணம் படைத்தவரின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் சொல்லும் வார்த்தை இது இப்பொழுது வசதி படைத்த குடும்பத்திலும் பெற்றோர்களுக்கே இந்த வியாதி பெருமளவில் தொற்றிக்கொண்டுள்ளது என் மகன் மிகப்பெரிய பள்ளியில் படிக்கிறான் சிறிய வயதிலேயே வாகனம் ஓட்டுகிறான் என்று பெருமை பேசுகிறார்கள் இதெல்லாம் உண்மையிலேயே அந்த குழந்தைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள்உணரமறுக்கிறார்கள் என் உறவினர் ஒருவர் மிகுந்த வசதி படைத்தவர் நிதிநிறுவனம் நடத்தி வந்தார் அவருக்கு ஒரு மகன் ஒரு மகள் அவர்கள் எதை விரும்பிக் கேட்டாலும் அப்பொழுதே வாங்கி கொடுத்து அதை பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவார் அவரது மனைவியும் அதையே  தான் செய்வார் இதனால் அவர்களிடம் உள்ள பழக்கம் நாளடைவில் அவர்கள் பிள்ளைகளுக்கும் தொற்றிக்கொண்டது அவர்கள் படிக்கும் இடங்களிலும் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே நட்பு வைத்துகொண்டார்கள் இப்படி சென்ற வாழ்க்கையில் திடீரென்று ஒரு திருப்பம் அவரது தொழிலில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது ஆனால் அவர் யாரிடமும் சொல்லாமல் அப்படியே தொடர அனைத்தையும் இழக்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலைமை அப்பொழுது இவர்களிடம் யாருமே தொடர்பு வைக்க விரும்பவில்லை அனைவரும் ஒதுங்கிவிட்டார்கள் அப்பொழுதுதான் அவர்களுக்கு புரிந்தது அவர்களால் அதை தாங்கமுடியவில்லை உடனே விஷம் குடித்து அனைவரும் இறந்துவிட்டார்கள் உண்மையிலேயே வசதியாக வாழ்வது மட்டுமே வாழ்க்கையில்லை நூறு ரூபாய் சம்பாதித்து தினம் கடையில் வாங்கி வந்து சமையல் செய்து சாப்பிடும் குடும்பத்தில் இருக்கும் சந்தோசம் மாடிமாடியாய் கட்டி விலை உயர்ந்த உடைகள் உடுத்தி ஆடம்பரமான கார்களில் பவனி வரும் குடும்பத்தில் கிடையாது பணம் மட்டுமே வாழ்க்கையல்ல நிம்மதியும் சந்தோசமும் மனதில் தான் இருக்கிறது பணத்தில் அல்ல உங்கள் குழந்தைகளுக்கு  தன்னம்பிக்கையை முதலில் வளருங்கள் ,எந்த நிமிடமும் எந்த சூழ்நிலையிலும்  தன்னை காப்பாற்ற மற்றவர்களிடம் பழக அனுமதியுங்கள் நல்லவர்கள கெட்டவர்கள் பாகுபாடு அவர்களுக்கே புரியும் என்ன புதிதாக சொல்லிவிடீர்கள் என்று நினைக்கவேண்டாம் இன்னும் சொல்கிறேன் .......................

Thursday, September 9, 2010

யார் இது ?

என்னிடம் எதுவுமில்லை விட்டு செல்வதற்கு,நான் ஏன் பிறந்தேன் என்றும் நான் ஏன் இறக்கிறேன் என்றும் எனக்கு தெரியவில்லை,எதற்க்காக இந்த பூமியில் ஒரு பெண்ணின் வயிற்றில் உருவானோம்,எப்படி உருவானது, இந்த உடல் எப்படி வந்தது இந்த முக அமைப்பு, நான் அழகானவனாக அல்லது அழகில்லாதவனாக  எப்படி இது யார் கொடுத்தார்கள், எதற்கு இந்த உடல் வளர்ச்சி இந்த உடலுக்கு ஒரு பெயர் எதற்கு, குழந்தை பருவத்தில் இத்தனை அன்பு பாசம் கவனிப்பு வளர வளர ஏன் இத்தனை கண்டிப்பு,அங்கே செல்லாதே,அவர்களிடம் பேசாதே,அவர்களை தொடாதே,எல்லாம் ஒரே உடல் தானே எதற்கு இந்த பாகுபாடு,எதற்கு இந்த படிப்பு, பணக்காரன் ஏழை ஒரு பக்கம் சொகுசான வாழ்க்கை,இன்னொரு பக்கம் சாப்பாட்டிற்கே வழியில்லாத வாழ்க்கை, உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி எதற்கு இந்த உடல்களுக்கு இத்தனை வேறுபாடு,ஒரு திருமணம் என்ற ஒருவிழா,அதனால் சில உடல்கள் மீண்டும் பிறப்பு அந்த உடல்கள் சொகுசாக வாழ நாம் முன்னரே சம்பாதித்து வைத்துவிட்டு பின்னர் இந்த உடல் வயது ஏற ஏற அதன் மதிப்பு குறைய ஆரம்பிக்கிறது , பணம் சம்பாதித்து வைத்திருந்தால் ஒரு கவனிப்பு இல்லையென்றால் புறக்கணிக்கப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் இந்த உடல் யாராலோ அழிக்கப்படுகிறது,இதெல்லாம் யாரால் நடத்தப்படுகிறது எதற்க்காக இதெல்லாம் நடக்கவேண்டும் இதை யாரிடம் கேட்பது இதற்க்கு ஞானிகள்  என்ற உடல்கள் சொல்கிறதாம், ஞானிகளும் உடல்தானே, உயிர் என்பது ஆன்மா அதற்க்கு எப்பொழுதும் அழிவில்லை உடல் மட்டுமே அழிகிறது அது மீண்டும் அடுத்த உடலாக பிறக்கிறது என்று. என் கேள்வி அதுவல்ல ,அந்த ஆன்மா எதற்க்காக உடலாக பிறப்பெடுக்கவேண்டும்,அது ஆன்மாவாகவே இருக்கலாமே எதற்கு உடலாக பிறந்து மீண்டும் மீண்டும் அழியவேண்டும் யார் இதை செய்கிறார்கள் இதற்க்கெல்லாம் விடை தெரியாமலேயே என் உடல் எரிந்துகொண்டிருக்கிறது............................................இது கட்டாயம் ஒவ்வொரு மனதிலும் பல எண்ணங்களை தோற்றுவிக்கும் என்று நான் நம்புகிறேன் இதை படித்துவிட்டு கட்டாயம் உங்கள் பார்வைகளை ஓட்டாக பதிவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் .............

Wednesday, September 8, 2010

அன்பே   
அன்பே 
உன்னை பார்த்தவுடன் உன் மலர்ந்த முகம் மட்டுமே என் கண்களுக்கு விருந்தாகப் படைக்கிறாய் உனக்கு பின்னால் இருக்கும் ஆயிரம் துன்பங்களை முட்கலாகக் கொண்டிருந்தாலும் உன் முக மலர்ச்சியினால் மறைத்துவிடுகிறாய் உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது இப்படி ஒரு மனது என்று ஒருபுறம் நினைத்தாலும் உன்னை நான் தொட நினைத்தால் என் கையை அல்லவா பதம் பார்க்கிறாய் அப்பொழுதுதான் புரிந்தது உன்னை அடைய பல துன்பங்களை தாண்டி நான் வரவேண்டும் என்று எனக்கு புரிய வைக்கத்தான் அந்த முட்கள் என்று ,ஒவ்வொரு இன்பத்தை அடையவும் பல துன்பங்களை தாண்டித்தான் அடைய முடியும் ஆயிரம் துன்பங்களை நீ கொடுத்தாலும் உன்னை அடையாமல் விடமாட்டேன் ,உன் அன்பு ஒன்றே போதுமடி நான் பட்ட காயங்களுக்கு மருந்தாக ...............................

Sunday, September 5, 2010


திருப்பம் எல்லோருக்கும் என் அன்பான வணக்கமுங்க..................................................................................... வாழ்க்கையை பற்றி ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி இது ஒரு சிறிய விசயமா இருந்தாலும் பெரியவங்களுக்கு இது ஒரு மாபெரும் சம்மட்டி அடி அதாங்க காதோட சேர்த்து அறையராதுன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஒரு விஷயம் இது சிலபேருக்கு புடிக்காம கூட இருக்கலாம் அப்படி இருந்தா தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள் என்னடா ரொம்ப ஓவரா இருக்கேன்னு நினைக்கிறிங்களா சரி சரி விஷயத்தை சொல்றேன் திட்டாதிங்க உண்மை சம்பவம் இது கதையல்ல நிஜம் என்னடா விஜய் டி வி ரொம்ப பார்ப்பானோ அப்படிங்கிரிங்களா ?அப்படிப்பட்டது தான் இதோ சொல்லுகிறேன் அவன் பெயர் கதிர் அவன் மனைவியின் பெயர் வசந்தி அவர்களுக்கு ஒரு மகன் ஆறு வயது அவன் பெயர் கமலேஷ் இவர்களுடன் இன்னொருவரும் இருக்கிறார் அவர் கதிரின் அப்பா மாணிக்கம் இவர்கள் குடும்பம் ஊரில் நல்ல மிக வசதியான குடும்பம் அந்த வசதிக்கு முதல் காரணம் மாணிக்கத்தின் அயராத உழைப்பு ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து படிப் படியாக முன்னேறி ஒரு பெரிய போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கினார்  தன் மகனையும்  நன்றாகப் படிக்க வைத்து தன் நிறுவனத்தின் பொறுப்பை  ஒப்படைத்து நல்ல இடத்தில் பெண்ணெடுத்து அவனுக்கு வாழ்க்கையும் அமைத்து கொடுத்தார் அதன் பின்னர் தான் அவருக்கு அந்த நிகழ்வு நடந்தது அவரது மனைவி சிவகாமிக்கு திடீரென்று மாரடைப்பால் காலமானார் அதன் பின்னர் அவரது நிறுவனத்திற்கு செல்வதை நிறுத்திக்கொண்டு முழுப்பொறுப்பையும் தன் மகனிடமே விட்டுவிட்டு வீட்டில் தன் பேரனுடன் கொஞ்சி தான் சந்தோசமாக இருக்க ஆசைப்பட்டு வீட்டிலேயே  இருந்து கொண்டார் ஒரு ஆறு மாதம் அமைதியாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது அவருக்கு சிறிது சிறிதாக விட்டல் மரியாதை குறைய தொடங்கியது சாப்பிடவும் வீட்டில் இருந்த பழையதை போட ஆரம்பித்தனர் அப்பொழுது தன் மகனிடம் சொன்னார் ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏதோ ஒன்னு குடுக்கிறதை சாப்பிடுங்க என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவான் அதன் பின்னர் அவருக்கென வீட்டில் ஒரு ஓரமாக இடம் அதாவது அவர்கள் நாய் வளர்க்கும் இடத்திற்கு பக்கத்தில் படுத்துகொள்ளசொல்லி விட்டனர் அவருக்கென ஒரு தட்டும் தரப்பட்டது இத்தனையும் இவர் யாரிடமும் சொல்லவில்லை சொன்னால் தன் மகனை கேவலமாக நினைப்பார்களே என்று நினைத்து மறைத்துவிட்டார் அவருக்கு ஒரே ஆறுதல் அவர் பேரன் மட்டுமே இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்தது ஒரு நாள் கலையில் அவருக்கு சாப்பாடு போடும் தட்டை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை மாலையில் தன் கணவனிடம் அதைப்பற்றி வசந்தி கூறிக் கொண்டிருந்தாள்  அப்பொழுது அந்தப்பக்கமாக வந்த கமலேஷ் அதை கேட்டவுடன் அவர்களிடம் சென்று அந்த தட்டை நான் தான் எடுத்து வைத்தேன் என்றான் எதற்கு என்று அவர்கள் கேட்டதிற்கு அவன் கூறிய பதில் அவர்களை உயிரோடு எரித்ததை போல் உணர்ந்தார்கள் இவ்வளவு சிறு வயது குழந்தைக்கு தோன்றுமென்று அவர்கள் சிறிதும் யோசிக்கவில்லை அவன் என்ன கூறினான் அப்படி ,உங்கள் இருவருக்கும் அப்படி வெளியில் உட்காரவைத்து சாப்பாடு போடவேண்டுமல்லவா அதனால் தான் இப்போதே எடுத்துவைத்தேன் என்றான் இதைவிட எப்படி புரிய வைப்பது ...........................................................இதில் இருந்து என்ன தெரிகிறது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இதுதான் நாம் என்ன செய்கிறோமோ அதுவே மீண்டும் நமக்கும் நடக்கும் சரி நண்பர்களே கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் தயவு செய்து படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துரையை இடுங்கள் அதுதான் நீங்கள் என் பதிப்பை பார்த்ததிற்கு எனக்கு கிடைத்த மாபெரும் விருது ,மீண்டும் சிந்திப்போம் .........................................................................................
திருப்பம்

Friday, September 3, 2010

தாய் இதை விட தாயை பற்றி சொல்ல என்னிடம் தகுதி இல்லை பட்டினத்தார் அருளியது                                                                                                          ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்றபோதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித் தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்தி பகலாய்ச்சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல்மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்!
அரிசியோ நான் இடுவேன்ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?
அள்ளி இடுவது அரிசியோதாய் தலை மேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்?-மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்டதீ தென் இலங்கையில்
அன்னை இட்டதீ அடிவயிற்றிலே
யானும் இட்டதீ மூள்க மூள்கவே!
வேகுதே தீயதனில்: வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பணியேன் ஐயகோ!-மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோனகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தாள் அன்னை,வீதிதனில் இருந்தாள்!
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்-பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!    இது பாடலாக அவர் இயற்றியத்தை அப்படியே வழங்கிவிட்டேன் பொறுமையாக வாசிங்கள் இதையே நீங்கள் சுவாசயுங்கள் .....                                                                                                                                                              அன்பான வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் இன்று முதல் என் இதயம் பேசுகிறது பக்கங்களாக வெளியிடுகிறேன் தயவு செய்து படித்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் ............. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...