Friday, October 22, 2010

உனக்கா இந்த நிலை

என் அன்பு வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் 
  ஒரு கொடிய விசமுள்ள மரத்தை நாமே வளர்த்துக் கொண்டிருக்கிறோம் அது நம் சமூகத்தில் வேரூன்றி மிக வேகமாக வளர்ந்து இன்று பல குடும்பங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது இது தன்னை கொன்றுவிடும் என்று தெரிந்தும் எல்லோரும் இதை வெறுத்தாலும் இதை  விட முடியவில்லை,இதனால் பல உயிர்கள் சித்திரவதைப்பட்டு வெளியில் சொல்ல இயலாமல் துடி துடித்து கொண்டிருக்கிறார்கள்
   அதை என்ன என்று சொல்ல கூட மனது வேதனையாய் இருக்கிறது அது சிலரின் கவுரவத்தின்  வெளிப்பாடாக நினைக்கின்றனர் சிலர் தன் நிலையை நினைக்காமல் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டும் என்ற நிலையை மட்டுமே மனதில் உறுதியாய் கடைப்பிடித்து பின்னர் அந்த சமுதாயத்தாலேயே அழிந்துவிடுகின்றனர் பல பெற்றோர்களின் உயிரை அட்டையை உறிஞ்சும் அந்த மரம் வரதட்சனை 
என்ற கொடிய விசமே 
  வரதட்சணை யார் வர தட்சணை தர வேண்டும்இந்த கொடிய விசத்தை கண்டு புடித்த  அந்த புனித ஆத்மா யாராக இருக்கும் எதற்கு இந்த பெண்ணினத்திற்கு இத்தனை சாபம் அவர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப் பாடுகள் அவர்களின் வாழ்க்கைக்கு மட்டும் ஏன் விலை நிர்ணயிக்கின்றன எதற்கு  இந்தகொடுமை 
  ஒரு உதாரணம்  
         நேற்று வெளி வந்த  ஒரு உண்மை சம்பவம் சேலம் அருகே புதுப் பெண்ணை தனியறையில் பூட்டி வைத்து ஒரு மாதத்திற்கு மேலாக வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தயுள்ளனர் கொடுமை செய்த மாமனார் மாமியார் கணவர் அனைவரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர் 
     சங்கீதாவின் பெற்றோர், பாலசுப்ரமணியத்துக்கு 50 சவரன் நகை, நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் கொடுத்தனர். கார் வாங்க பணம், நகை கேட்டு, பாலசுப்ரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொந்தரவு செய்ததோடு, முதலிரவுக்கும் அனுமதிக்கவில்லை.

பணம், நகை வாங்கி வராததால், இளம்பெண் சங்கீதாவை வீட்டினுள் தனி அறையில் பூட்டி, கழிவறை தண்ணீரை கொடுத்து சித்ரவதை செய்தனர். தகவலறிந்த சங்கீதாவின் பெற்றோர், மகளை உறவினர்களுடன் சென்று மீட்டனர். "திருமணமாகி வீட்டிற்கு வந்ததும் என் தாத்தா இறந்து விட்டார். திருமண நாள், தாத்தா இறந்த நாள் ஒன்றாக நடத்த வேண்டியுள்ளது. அதனால் அப்பெண்ணுடன் வாழமுடியாது' என, பாலசுப்ரமணியன் தெரிவித்தார். ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சங்கீதா, புகார் செய்தார்.


இதையடுத்து பாலசுப்ரமணியன் (27), மாமனார் யூனியன் இன்ஜினியர் மகாலிங்கம் (57), மாமியார் கலாவதி (43) ஆகிய மூவர் மீது, பெண்ணை கொடுமை செய்தல், அடைத்து வைத்து சித்ரவதை செய்தல், நம்பிக்கை மோசடி செய்தல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டனர். சங்கீதாவின் தந்தை மகாலிங்கம் கூறியதாவது: என் மகள் சங்கீதா, சென்னையிலுள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தார். திருமண ஏற்பாட்டின்போது, மகளின் வேலையை விட்டு வரும்படி தெரிவித்தார். அதன்பின், ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.


திருமணத்தின்போது 50 சவரன் நகையும், "பொலீரோ' கார் வாங்க நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தோம். தற்போது, 9 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கியதால், மீதமுள்ள 5 லட்சம் ரூபாயும், 25 சவரன் நகை கொடுத்தால் மட்டுமே மகளுடன் வாழமுடியும் என, பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதன் பிறகு, மகளை தனி அறையில் பூட்டி வைத்து நாள்தோறும் ஒருவேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து, கழிவறை தண்ணீரை குடிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.


திருமணமாகி 40 நாளில் பல கொடுமைகளுக்கு மகள் ஆளாகியுள்ளார். இதற்கு காரணமான அவரது பெற்றோர் உள்ளிட்ட நபர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மகாலிங்கம் கூறினார். வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சி: மகுடஞ்சாவடி யூனியன் இன்ஜினியராக, மகாலிங்கம் பணிபுரிகிறார். விசாரணைக்காக போலீசார், அவரை அழைத்து வந்ததை அறிந்த ஆத்தூர் யூனியன் பி.டி.ஓ., - ஏ.பி.டி.ஓ., மற்றும் அலுவலர்கள், நான்கு மாதத்தில் ஓய்வு பெறும் பொறியாளர் மகாலிங்கத்தை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக மகளிர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்து போட போலீசார் அழைத்தபோதும் பொறியாளர் மகாலிங்கம், மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளதாக கூறி, கையெழுத்து போட மறுத்தார். ஆனால், மகளிர் போலீசார் மகாலிங்கம் உள்பட மூவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்     
 இதில் யாரை குறை சொல்வது பெண்ணை  பெற்ற பெற்றோர்களையா அந்த பெண்ணை திருமணம் செய்து வந்து கொடுமை செய்த அந்த பண வெறி புடித்த மிருகங்களையா ? இதில் தவறு செய்தவர்கள் என்னை பொறுத்த வரையில் அந்த பெண்ணின் பெற்றோர்களே, ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை செய்கின்ற ஒரு பெண்ணுக்கு இந்த நிலை என்றால் படிக்காத பாமர பெண்களின் நிலை என்ன?


தயவு செய்து படித்து உங்கள் கருத்துக்களையும் ஓட்டுகளையும்  தவறாமல் எழுதுங்கள் 

Thursday, October 21, 2010

இதென்ன கொடுமை

அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்                                ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் ஏன் மற்றவர்களைப் பற்றி பெருமையாக பேசுவதையே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள் எதனால் இப்படி ஒரு மனப்பான்மை ,உன்னை பற்றி ஒருநிமிடம்நினைத்துப்பார்,நீ வந்த வாழ்க்கை பாதையை நினைத்துப்பார் நாம் மனிதனாக பிறப்பது ஒரு முறை மட்டுமே,மறு பிறப்பு உண்டா இல்லையா என்பதைப் பற்றி நமக்கு தெரியாது ஏன் நம்மையே நாம் அழித்து கொண்டிருக்கிறோம்     நமக்கு இந்த அறிய பொக்கிசமான இந்த பிறப்பை கொடுத்தவர்கள் நம்பெற்றோர்கள்,அவர்களே நம் முதல் தெய்வங்கள் அவர்களே நம் கண்களுக்கு தெரிந்த நடமாடும் தெய்வங்கள் ,ஆனால் இன்று அந்த பெற்றோர்களை காக்க பல ஆசிரமங்கள் தோன்றிக்கொண்டிருக்கிறது இது உண்மையிலேயே நல்லவிசயமா,அவர்கள் அவ்வளவு துரோகமா செய்துவிட்டார்கள், வயது ஏற ஏற அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அவர்கள் இப்பொலுதெல்லாம் ஒரு தொல்லையாகவே தெரிகிறது இதற்க்கெல்லாம் என்ன காரணம் பணம்,இதை மட்டுமே விரும்பும் சமூகம் இப்பொழுது அதிகரித்துக்கொண்டிருக்கிறது,அடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புகிறவர்களுக்கும் இவர்கள் ஒரு பாரமாகவே கருதுகிறார்கள் சிலர் தன் பெற்றோர்கள் படிக்காதவர்களாகவும் அழகு குறைந்தவர்களாகவும் இருந்தால் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவே தன் கவுரவம் பாதிப்பதாக நினைத்து அவர்களை ஒதுக்கிவைக்கிறார்கள் ஆனால் இவ்வளவு இன்னல்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்ளவே செய்கிறார்கள்                           இதோடு மட்டும் அல்ல பணத்துக்காகவும் சொத்துக்காகவும்சொத்து தகராறில் ஒரே குடும்பத்தில் 6 பேர் வெட்டிக்கொலை, தன் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களை  கொலை செய்யவும் பலர் தயாராகுமளவுக்கு இந்த நாட்டின் கலாச்சார முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது . தன் சொந்தவிசயங்களில் தலையிடும் பெற்றோர்களை விரும்புவதில்லை அவர்களை ஒதுக்கவே விருப்பப்படுகின்றனர். அதனால் அவைகளை விட்டு விலகுவதையே  விரும்புகின்றனர் 
   இந்த  பண்பாடு தான் நாகரீக வளர்ச்சியா அனைத்து பாச பந்தங்களையும் வேரில் வெந்நீர் ஊற்றி அழித்துக்கொண்டு பணம் என்ற ஒன்றை நம்பியே இன்றைய சமுதாயம் முன்னேறிக்கொண்டிருக்கிறது தாத்தா ,பாட்டி தான் குழந்தைகளின் முதல் நட்பு அவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறி அவர்களின் அனைத்து செயல்களுக்கும் எது சரி எது தவறு என்று புரியும் படி சுட்டிக் காட்டி அவர்களை வழி நடத்தி செல்வார்கள் அதை குழந்தைகளும் உடனே ஏற்றுக்கொள்வார்கள்   .
       ஆனால் இன்றைய குழந்தைகள் நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு அந்த பாசப்பிணைப்பு கிடைப்பதில்லை அவர்கள் ஒரு இயந்தர தனமான வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டார்கள் ..........................................................இன்னும்தொடரும் 

Sunday, October 17, 2010

ஒரு உயிரின் கதறல்

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்
 எல்லா ஆண்களுக்கும் தனக்கு அழகான மனைவி அமைய வேண்டும் , ஆடம்பரமான வீடு வேண்டும் , தான்  பயணம் செய்ய வித விதமான கார் வேண்டும், பெரிய பெரிய உணவகங்களில் உணவு unna வேண்டும் , வித விதமான உடை அணிய வேண்டும் , தனது மனைவிக்கு வித விதமான ஆடை அணிகலன்கள் போட்டு அழகு பார்க்க வேண்டும் , தொழில் துறையில்  தான் முதலிடத்தில்  இருக்க வேண்டும், எந்த விழாவானாலும் சரி தன்னை முன்னிறுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் எந்த நிலையிலும் தான் தான் என்பர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த நினைத்து வாழ்ந்தவர்கள் தன் நிம்மதியையும் சந்தோசத்தையும் துளைத்துவிட்டு இறுதியாக அதை தேடுவதிலேயே   தன் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

     தன் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களே தவிர அவள் அன்பாக இருப்பாளா  என்று அறிய முற்ப்படுவதில்லை. தன் மனைவியை அழகுபடுத்தி தான் கவனிப்பதை விட மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவதையே விரும்புகிறான் அவளை ஒரு காட்சிப் பொருளாகவே நினைக்கிறான் அந்த அழகு உள்ளவரை ,அந்த அழகு குறைய குறைய ஒரு வெறுமை அவனுள் குடி கொள்கிறது ,பின்னர் தன் குழந்தைகளை காட்சிப் பொருளாக்குகிறான்,இதிலேயே அவன் கவனம் செல்கிறதே தவிர பாசம் சந்தோசம் அன்பு என்ற எல்லாமே பணம் மட்டுமே என்ற 
எண்ணத்திலேயே வாழ்ந்து முடிக்கும் போது கடைசி நிமிடத்தில் அவன் மனதில் தோன்றுகிறது 
தான் வாழாமலே இந்த உலகைவிட்டு செல்கிறோம் என்று அப்பொழுதான் தோன்றுகிறது 
தன்னிடம் வேலை செய்பவர்களிடம் காட்டும் அன்பைக் கூட தன் மனைவியினிடத்தில் காட்ட விரும்புவதில்லை 
ஒரு உதாரணம் சொல்லுகிறேன் 


 என் கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை என்று எழுதி வைத்துவிட்டு  தன் மகனை கொன்றுவிட்டு தானும் இறந்து விட்டார் ஒரு பேராசிரியரின் மனைவி அவரும் ஒரு தொடக்க பள்ளி ஆசிரியை அவர் இறக்கும் முன்னர் எழுதி வைத்த ஒரு கடிதம் 
  
 வாழ ஆசைப்பட்டு தான் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தேன் அதற்க்கு நான் அன்றே இறந்திருக்கலாம் இன்று இந்த ஐந்து வருடங்களாக தினம் தினம் கொஞ்சம்  கொஞ்சமாக கொன்று இந்த உடல் மட்டும் ஏன் இருக்கவேண்டும் என்று தான் இந்த முடிவை எடுத்து உள்ளேன் 
என் கணவன் என்ற மிருகத்திடம் என் குழந்தையை விட்டு செல்ல விருப்பமில்லை படிக்க வைக்கிறேன் என்ற பெயரில் அடித்தே கொன்றுவிடுவான் என் குழந்தையை இந்த உலகில் அனாதையாய் விட்டு செல்ல விரும்பவில்லை , என்னுடனே பயணிக்கட்டும் 
என் சாவிற்கு காரணமான என் கணவனை தண்டியுங்கள் 
இப்படிக்கு இந்த உலகில் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாத செல்லும் சுதா திருமகள் 
  
ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவிக்கே இந்த நிலைமை ஆசிரியர் என்றாலே அனைவரும் குருவாக வழி பட வேண்டியவர்கள் என்று அனைவரு அறிந்த ஒன்று ஆனால் இப்பொழுதெல்லாம் படித்த மிருகங்கள் செய்யும் காரியங்களுக்கு படிக்காத பாமர மக்களே சிறந்தவர்கள் .....................................................

தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் ஓட்டுகளையும் தவறாமல் பதிவிடுங்கள் 



Tuesday, October 12, 2010

என்ன இல்லை இந்த திருநாட்டில் ?

அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் ,
உண்மையிலேயே என்ன இல்லை இந்த திருநாட்டில் ஏன் அனைவரும் வெளிநாட்டிற்கு சென்று திரும்ப மறுக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இவ்வளவு வளங்களா  நம்நாட்டில் நம் நாட்டில்
  கோவில்கள் தோறும் பிச்சை காரர்கள்இல்லையா? சாமி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் புண்ணிய ஆத்மாக்கள் இல்லையா ?கோவில்   கருவறையில் சல்லாபிக்கும் பூசாரிகள் இல்லையா? அதையே வீடியோவாக எடுத்து வெளியிட்டு சம்பாதிக்கும் கயவர்கள் இல்லையா?நாம் குடிக்கும் ஆற்று நீரிலேயே நம் கழிவு கலந்த சாக்கடை நீரை அதிலேயே கலக்கவிட்டு அதையே சுத்தம் என்ற பெயரில் ஏதோ செய்து திரும்ப நாமே குடிக்கின்றோமே அது எவ்வளவு பெரிய விஷயம் நம் நாட்டு குடி நீரை வெளி நாட்டு குளிர் பானக் கம்பனிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு நாமே பாட்டில் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கி குடிப்பதில்லையா ?
வீதிகள் தோறும் சுத்தம் செய்வதாக சொல்லி ஊரெல்லாம் குப்பையை இறைத்துக்கொண்டு செல்லும் லாரிகள் இல்லையா? அசுத்தம் செய்யாதே என்று எழுதியிருந்தால் அதையே  தேடிச் சென்று அசுத்தம் சேயும் செயல் வீரர்கள் இல்லையா? ஐம்பது ருபாய் மதுவுக்காக கொலை செய்பவர்களும் சொத்துக்காக தன் குடும்பத்தையே வெட்டுபவர்களும் தன்வீட்டிலே திருடி வாழ்பவர்களும் இங்கு இல்லையா ? 
அரசியல் வாதிகளுக்காக வெட்டிக் கொல்வதும் மக்களைத் துன்புறுத்தவும் மாற்றான் இடத்தை அபகரிப்பதும்,மாற்றான் மனைவியை கவர்ந்து செல்வதும் அதற்காக கொலை செய்வதும் அரசியலுக்காக பேருந்துகளை தீயிட்டு எரிப்பதும் கல்லூரி மாணவிகளை தீயிட்டு கொளுத்திவிட்டு தூக்குக்காக காத்திருப்பதும் எவ்வளவு நல்ல மனிதர்கள் மனிதநேயமிக்க மகான்கள் வாழும் புண்ணிய பூமியல்லவா இது ?
   எதிலெல்லாம் லஞ்சம் வாங்க முடிமோ அத்தனையிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முதல் அங்கிருக்கும் மெய்க்காப்பாளன் வரை அனைவரும் லஞ்சப்பணத்தில் ஊறி திளைக்கும் எஜமானர்கள் வாழும் பூமி இல்லையா ?அரசு அதிகாரிகள் என்றாலே மக்களிடம் காட்டும் அன்பு தான் என்ன எவ்வளவு கேவலமாக நடத்தமுடியுமோ அவ்வளவு அழகாக கேவலப்படுத்தும் புனிதர்கள் வாழும் இடமப்பா இது 
 நல்லாசிரியர் விருது கொடுத்தால் அவர் உடனேயே இலஞ்சம் பெற்று நல்லாசிரியராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் பக்குவம் காவல் துறை உங்கள் நண்பன் என்று மார்தட்டிக் கொள்ளும் காவல் துறை நண்பர்கள் இருக்கிறார்களே அவர்களை பற்றி தெரிய வேண்டுமென்றால் ஒரு முறை லாரியில் பயணம் செய்து பார்த்தால் தெரியும் அவ்வளவு நன் மக்களை காவலர்களாகப் பெற்ற நாடு விருது வாங்கிய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியே இலஞ்சம் வாங்கி மாட்டும் புனித செயல் இங்கல்லவா நடக்கிறது இயற்க்கை கொடுத்த கனிம வளங்களை கொள்ளை இங்கு வெகு விமர்சியாக நடக்கிறது 
 கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கயவர்களைக் கொண்ட ஆத்மார்த்தமான நாடு இது 
பத்து படங்கள் நடித்து முடித்தாலே நாட்டிற்கே முதல்வராக ஆகிவிடவேண்டும் என்ற எண்ண்த்தை தோற்றுவிக்கும் மக்களை பெற்ற நாடு ,தன் தாய்க்கு கோவில் கட்டுகிறானோ இல்லையோ ஒரு நடிகைக்காக கோவில் கட்டும் இளைய சமுதாயத்தை  பெற்ற நாடு 
மதுபானத்திற்கு தனியார் கடைகளை தேட வேண்டாம் ,நாங்களே உங்களை கொல்ல தயாராக இருக்கிறோம் இதோ வாங்கிக் கொள்ளுங்கள் என்று அரசே ஏற்ற்று நடத்தும் மதுபானக் கடைகள் நிறைந்த நாடு தன்னிடத்தில் மின்சார உற்பத்தி செய்து மற்றவர்களுக்கு தாரை வார்த்துவிட்டு நமக்கு மின்சார பற்றாக்குறை என்று அறிவிக்கும் போது நலம் கொண்ட நாடு அரசு அலுவலர் ஒருவர் தவறு செய்து அதை தட்டிக் கேட்டால்   அந்த நிர்வாகத்தையே முடக்கும் அளவுக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் மிரட்டும் அரசு அலுவலர்களைக் கொண்ட நாடு 
 ஜாதி மதம் என்ற பெயரில் அரசியல் இலாபத்துக்காக கட்சி தொடக்கி நாட்டிலேயே வன்முறைகளைத் தூண்டும் மக்களாட்சி பெற்ற நாடு ,
 அந்த ஆட்சியையே தேர்ந்தெடுக்கும் மக்கள் தன் ஓட்டுக்காக பணம் வாங்கிக்கொண்டு தன் ஓட்டை  விற்கும் மக்களை பெற்ற நாடு தன் ஆட்சியை நிலை நிறுத்த தாங்களே ரவுடிகளை வளர்த்து பணமும் கொடுத்து வெட்டி கொலை செய்யும் அளவுக்கு வளர்த்துள்ள நாடு 
இன்னும் என்ன வேண்டும் இந்த திருநாட்டில் ஏன் செல்கிறீர்கள் வெளிநாட்டிற்கு ?

Thursday, October 7, 2010

என் உயிரே எங்கே சென்றாய் ?

ஏன் இப்படி ஒரு அதிர்ச்சி எதற்கு இவ்வளவு பெரிய துன்பம், எதற்காக கொடுத்தாய் எதற்கு இப்படி பரித்துகொண்டாய், எங்களுக்கு இந்த பாசப்பிணைப்பை கொடுத்து உரு தெரியாமல் அழிக்கவா?                                                                                                                                                                         ஒவ்வொரு உயிர் பிறக்கும்போது கொடுத்த சந்தோசத்தை விட அது போகும்போது இருக்கும் துன்பம் இருக்கிற கொடுமை மிக மிக கொடியது என்னை பெற்ற தாய் தந்தை  என்னை குழந்தையாய் அவர்கள் கையில் தவழும்போது எத்தனை சந்தோசம் அவர்களுக்கு இருந்திருக்கும் நான் தவழ்ந்த போது எழுந்து நடந்தபோது ஓடும்பொழுது எத்தனை ஆர்பரித்து கைதட்டி கொண்டாடினார்கள் எதற்கு இத்தனை சந்தோசத்தை கொடுத்து நான் வளர வளர என்னை மட்டுமே சந்தோசப்படுத்தி அவர்களை துன்பப்படுத்திக்கொண்டு எத்தனை அன்பை கொடுக்கிறார்கள் இப்படி சென்ற வாழ்க்கையை மரணம் என்ற போர்வையில் அவர்களை  கவர்ந்து செல்வது நியாயமா இத்தனை நாள் ஒட்டி உறவாடிய அந்த கைகள் என் கண்களில் நீர் வரும் முன்னரே அவர்கள் கண்களில் கண்ணீர் துளிகள் துடித்து கொண்டு வரும், என் முகம் சோர்வடைந்தால் அவர்கள் மனது துடியாய் துடிக்கும் அந்த  பொன்னான இதயம் எங்கே ?                                                                                                              உங்களை மண்ணில் புதைத்துவிடுவேன் என்று அப்போதே தெரிந்திருந்தால் அப்பொழுதே நாம் எல்லோரும் புதைந்திருக்கலாமோ இப்படி என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் புதைந்து போனிர்களே நான் யாரை போய் கூப்பிடுவேன் அப்பா என்று என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உங்கள் உதிரம் அல்லவா ஓடுகிறது என் செல்கள் ஒவ்வொன்றும் துடிக்குதப்பா உங்கள் திருமுகத்தை காண நான் எங்கே சென்று தேடுவது "வாழ்க்கை என்றால் ஆயிரமிருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்" ஆனால் எனக்கு அந்த ஆயிரமும் நீங்கள் தான் ஆனால் எனக்கு வேதனை என்றாலே தெரியாமல் வளர்த்துவிட்டு மொத்தமாக கொடுத்துவிட்டிர்களே என் வாழ்க்கை விளக்கை சுடரை ஏற்றிவிட்டு நீங்கள் இருட்டிற்குள் சென்றுவிட்டிர்களே "பிறப்பு எப்படி என்று என் பிறப்பில் நான் தெரிந்து கொண்டேன் ஆனால் இறப்பு எப்படி என்று உணர்த்தவா நீங்கள் சென்றீர்கள் " உங்கள் புன்னகை பூத்த முகத்துடன் நீங்கள் சென்றுவிட்டீர்கள் என் புன்னகை அல்லவா தொலைந்து போனது வானில் தோன்றும் கருமேகமா நீங்கள் திடீரென்று களைந்து செல்வதற்கு ,நீங்கள் சூரியன் என்றல்லவா இதுவரை நான் நினைத்திருந்தேன் ஆனால் சந்திரனை போல் மறைந்துவிட்டீர்களே                                                                   

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...