Tuesday, December 27, 2011

ஐயோ என் உறவுகள் எங்கே???????????


நம் நாட்டில் பெரும்பாலான குடும்பத்தினர் ஓரிரு குழந்தைகளே பெற்றுக்கொண்டதன் காரணமாகவும், உறவினர்களிடமிருந்து விலகிப் போகும் போக்கைக்  கடைப்பிடிப்பதாலும் உறவுகள் அருகி வருகின்றன.

குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, மைத்துனன்  போன்ற உறவுகள் பல உண்டு. காதணி விழாவில் இருந்து, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா என எந்த  விசேஷம் என்றாலும்கூட, தாய்மாமன் சீர்வரிசை கொண்டுவந்து தனது உறவின் பலத்தை நிரூபிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது.

ஆனால், இன்று ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பிறப்பதாக  எடுத்துக்கொண்டால், அந்தக் குழந்தைக்கு அண்ணன், தம்பி, அக்காள், தங்கை உறவு  இல்லாமல் ஆகிவிடுகிறது. அது வளர்ந்து பெரியவளாகி, அதற்குத் திருமணமாகி குழந்தை  பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு தாய்மாமன், பெரியம்மா, பெரியப்பா, சித்தி,  சித்தப்பா போன்ற உறவுகளும் இல்லாமலே போய்விடுகிறது.
வருங்காலங்களில் இதே  நிலை நீடித்தால் தாய்மாமன் உள்ளிட்ட முக்கிய உறவுகள் எல்லாம் பல சந்ததியினருக்குத்  தெரியாமலே போய்விடும்.
அண்ணன், தம்பிகளிடையே திருமணமான சில ஆண்டுக்குள்ளே சொத்துகள்  பிரிக்கப்படும்போது உறவுகளும் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இவர்கள் வெவ்வேறு  ஊர்களுக்குச் சென்றுவிட்டால், இரு வீட்டிலும் உள்ள சிறு குழந்தைகளுக்கு சித்தப்பா,  பெரியப்பா உறவு முறைகளுடன் பழகும் வாய்ப்புகள் இல்லாமலே போய்விடுகிறது.
முன்பெல்லாம் ஓர் இல்லத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அதற்கு  முந்தைய நாளே உறவுகள் எல்லாம் கூடி, அந்த வீடே களைகட்டிவிடும். ஆனால்,  இப்போது உறவுக்குள் உள்ள இடைவெளியாலும், உறவுகளின் குறைபாட்டாலும்,  நண்பர்களும், உடன் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களும் மட்டுமே, அதுவும்  குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் வருங்காலச் சந்ததியினரிடம் பணம் இருக்கும். பாசம்  இருக்காது; பண்பாடு தெரியாது. உறவினர்கள் யாரேனும் அருகிலே இருந்தாலும்கூட அவர்கள் இருப்பதே தெரியாமல் போய்விடும். உறவுமுறைகளும் மறைந்து போய்விடும்.  நம் கலாசாரம், பண்பாட்டின் அடையாளங்கள் மறைந்து போய்விடும்.

இன்று பழைய அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் காட்சிப் பொருளாகவும், நினைவுச்  சின்னங்களாகவும்தான் உள்ளன. அதன் மறுசுழற்சி மிக்சியாகவும், கிரைண்டராகவும்  மாறிவிட்டதால், அம்மிக்கல்லும், ஆட்டு உரலும் புதிய சந்ததியினருக்குத் தெரியாமலே  ஆகிக் கொண்டிருக்கிறது. இதே நிலைதான் உறவுகளுக்கும் ஏற்படும்.
முன்பெல்லாம் பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் வாழ்த்துகளுக்கு, கோயில் திருவிழா அழைப்புக்கு என வெளியூரில் இருக்கும் உறவுகளுக்கு கைப்பட கடிதம் எழுதுவர். அதில் ஓர் உயிரோட்டம் இருக்கும். ஆனால், இன்று இ-மெயில்,  குறுந்தகவல் என எத்தனை வந்தாலும் அடுத்த விநாடியே சிந்தையில் இருந்து மறைந்து விடுகிறது.
கடிதத்தில் தனது உறவு முறைகள் அனைவரையும் குறிப்பிட்டு அவர்கள் எப்படி  இருக்கிறார்கள் என நலம் விசாரிப்பதால் உறவுகள் பலப்பட்டு வந்தன. அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஊரில் இருந்தாலும் குடும்பத்துடன் வந்து சேர்வர். திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் உறவினர்களுக்கு விருந்து அளிப்பர். இதன்மூலம் உறவுகள் பலம் பொருந்தியதாகக் காணப்படும். இதெல்லாம் இன்றும் கிராமத்து அளவில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், படித்தவர்கள் மத்தியில்தான் இந்த உறவில் விரிசலே ஏற்படுகிறது. அவசர  யுகத்தில், கணவன் மனைவியேகூட, முழுமனதோடு நேரம் ஒதுக்கித் தங்கள் கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எந்த உறவினர் வீட்டுக்குச் சென்றாலும்கூட, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் சென்றுவிட்டு, உடன் அவசர அவசரமாகச் சென்றுவிடுவதால், அங்கு வந்திருக்கும் உறவினர்கள்  பலருக்கு யார் இவர் என்ற விவரங்கள்கூட தெரியாமலே போய்விடுகிறது.  குழந்தைகளுக்கும் உறவுகளைப் பற்றி தெரியாமலே போய்விடுகிறது.
உறவுகள் சிறக்க வழிதான் என்ன? நம் நாட்டில் உள்ள மக்கள்தொகையைக் கருத்தில்  கொண்டு, கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதேசமயத்தில், இருக்கும் உறவு முறைகளை எப்படிப் புதுப்பிக்கலாம் என்று நமது சந்ததியினருக்குக் கற்றுக்  கொடுக்கலாம்.
அதிக பாடச்சுமையைக் காரணம் காட்டி குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டுமே செல்ல  வலியுறுத்தாமல், உறவினர்கள் வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்  செல்வதோடு, உறவினர்களை உறவு முறை சொல்லி அறிமுகம் செய்ய வேண்டும்.
முன்பெல்லாம் தலைமுறை தாண்டினாலும் வரப்புகள் பிரிக்கப்படாமல் இருந்தது.  அந்த அளவுக்குப் பெருந்தன்மை ஓங்கியிருந்தது. காரணம், பணம் பின்னால் நின்றது. உறவுகள் முன்னால் நின்றன. அதே நிலை நீடிக்கக்கூடிய மனப்பக்குவம் வளர வேண்டும்.
முக்கிய விழாக்காலங்களில் இருந்து, பிறந்த நாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து,  தேர்வில் வெற்றி பெற்றால் வாழ்த்து என அனைத்து விஷயங்களுக்கும், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுங்கள். அதில் உயிரோட்டம் இருக்கும்..............................

Friday, December 2, 2011

மு . க . ஸ்டாலின் கைதா ? அலரும் தி மு க



மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது கொலை மிரட்டல் உட்பட நில அபகரிப்பு என ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன

வழக்குகளை நான் நேரடியாக சந்திப்பேன் வாய்தா வாங்கமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார் இந்நிலையில் வழக்குகள் அனைத்தும் எஃப் ஐ ஆர் போடப்பட்டுவிட்டது எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

கனிமொழி ஜாமீனில் வெளிவந்த நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்படும் சூழல் திமுக வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அடுத்து என்ன நடக்குமோ......................விரைவில்

Monday, June 27, 2011

என் மக்களே உங்களுக்கான கடிதம் ..............

                                         என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை அறிய வேண்டும் என்ற நல்நோக்குடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலுடனும் பகிர்ந்துகொள்கிறேன் 

நான் படித்த பல வலிகளிலும் இந்த வலி மிக கொடிது .............

நான் படித்த இந்த வரிகள் அனைவரிடமும் செல்ல வேண்டும்
இது போல நான் பல எழுதியிருந்தாலும் என்னை மிகவும் பாதித்த வரிகள்

என் உடலிலே முதலிலே எரியப்போகும் உறுப்பு
உன்னை சுமந்த கருப்பையாகத்தான் இருக்க வேண்டும்

என்ற வரியில் இருக்கும் உண்மை நிலையை ஒரு நிமிடம் நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கும்................



                                                                                                                                                                                                                                                 
 






இன்னும் இது போன்று உண்மை வலிகளுடன் உங்கள் அனைவரிடம் மீண்டும் வருவேன்......................

Tuesday, June 21, 2011

ராஜீவ் காந்தி படுகொலை வெளிவராத அதிச்சி தகவல்



     முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. 
உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.
உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..
என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?
1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே... தெரியுமே.. என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.
அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’
சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..
நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.
பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.
நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’
அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?
இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.
மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.
வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.
என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.
அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’
சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?
அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.
நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.
பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’
சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?
ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.
சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.
மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.
அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.
அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.
இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.
தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.
ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.
ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?
அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.
சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.
சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.
என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து...............
நன்றி - சூரியகதிர்

Saturday, May 14, 2011

உண்மைச் சம்பவம்


நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

Sunday, May 1, 2011

மாவீரன்....


கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரன் தீரன் சின்னமலைஇன்னறய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல், 17, 1756 அன்று பிறந்தவர். 
அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்).இவரின் இயர் பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது.இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.இவர்கள் ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் ‘சர்க்கரை’ என பெயர் பெற்றார்களாம்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் ‘சின்னமலை’ என்ற பெயர் வழங்கலாயிற்று. 

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார்.இன்னறய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.7.12.1782 இல் ஐதர்அலி மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். 
சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் ‘கொங்குப்படை’ சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். 
முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.
 சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.
எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. 
சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் , சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.
சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.
 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது............

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...