Monday, April 9, 2018

கடவுள் வாழும் வீடு . 1

                                              கடவுள் வாழும் வீடு . 1 


   வீடு என்பதும் கோவிலே . நம்  முன்னோர்கள் சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த வீடுகளும் அவர்கள் வாழ்ந்த மண்ணும் நமக்கு கோவில்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும் தெரிய வாய்ப்பில்லை இன்று பலருக்கும் .

நாம் வாழும் வீடுகளில் ஆயிரம் வாஸ்து சாஸ்திரங்களை பார்த்து பார்த்து கட்டியும் நிம்மதி இல்லாமல் வாழ்பவர்களே மிக மிக அதிகம் என்பதை மறுக்க இயலாது. எதனால் இந்த நிலை வருகிறது என்று எவரும் சிந்திக்க நேரமில்லை, என்ன செய்வது எந்த நேரமும் மற்றவர்கள் என்ன நினைப்பர்களோ என்று யோசித்து யோசித்து பயந்து பயந்து வாழ்ந்தே பழகிவிட்ட நமக்கு நம் வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

நாமும் தினசரி வீட்டில் பூஜை புனஸ்காரம் செய்து கோவில் கோவிலாக சென்றும் நிம்மதி மட்டும் கிடைக்காமல் சண்டையிட்டு சண்டையிட்டு அதுவும் வெளியே தெரியாமல் மற்றவர்கள் முன்னால் பொய்யான புன்னகைகளை வரவழைத்துக் கொண்டு வாழ்வது இருக்கிறதே இதை விடவா நரகம் ஒன்று இருந்துவிடப் போகிறது 

எதனால் இத்தனை துன்பங்கள் வெளியில் பகட்டாக வாழ்ந்தாலும் நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்க முடிந்தாலும் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடிந்தாலும் மனம் என்னும் வீடு வேதனையை மட்டுமே மிக பெரிய பாறாங்கல் போன்ற பாரத்தை மட்டும் சுமந்து கொண்டே இருக்கிறதே எதனால் என்று கரணம் தெரியாமலே தவித்து கொண்டிருக்கிறோம் 


அப்படிப்பட்ட மனங்களுக்கு விடை தேடுவோம் வாருங்கள் ..........

காலத்தின் மாற்றமல்ல இது கயவர்களின் மாற்றம்


  இது நிச்சயமாக காலத்தின் மாற்றமல்ல, சில கயவர்களின் நயவஞ்சகத்தால் ஒட்டு மொத்த மக்களின் நிலையும் மாற்றத்தை கண்டுள்ளது, என்பதை விட மீளா துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது என்பதே உண்மை. 

படிப்பு படிப்பு என்று படிக்க வைக்கபட்டவர்களை  விட, மிக அதிகமாக குடிக்கவைக்கப் பட்டவர்களே அதிகம். படித்தவரும் பாழாகிப்போன நிலை பாமரனின் வாழ்வை விட படித்தவனின் வாழ்வே திண்டாட்டமாக இன்று,

ஒருவனின்  சுய இலாபத்திற்கு பயன்படுத்தப் படுகிறார்கள் மற்ற ஏழ்மையானவர்கள் அனைவருமே .  அவனது பணத் தேவையை தெரிந்து கொண்டு தன் குடும்பம் சொகுசாக வாழ அவனுக்கு சிறிது சிறிதாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிச்சையிடுகிறான், இவனும் வாங்கி தின்னுகிறான் இந்த நிலைக்கு காரணம் தேவைகளை அதிகப்படுத்தி பணத்தாசை பிடித்த மிருகங்கள் தன பண பசிக்கு அவர்களை இரைகளாக பயன்படுத்துவது தெரியாமல் பிச்சை எடுக்கிறார்கள் தன ஓட்டுக்களைக் கூட விற்று தின்னுகிறான் வாங்கும் பணம் தன்னுடைய வரிப்பணத்தில் வந்ததென்றே தெரியாமல் .

விளம்பரம் விளம்பரம் விளம்பரம் எங்கு நோக்கினும் இது மட்டுமே அதை மக்களின் மனதில் பதிய வைத்து அதை பயன்படுத்தி விற்று பணம் தின்னும் பேய்கள் இந்த சில  ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கின்றன 

அன்று வாழ்ந்த மனித இனங்கள் காட்டு விலங்குகளுக்கு மட்டுமே அஞ்சி வாழ்ந்தான். இன்றோ உடன் வாழுபவேனே மிருகமாய் மாறி விட்ட முன்னேற்றமான காலம் இது. எவன் உண்மையானவன் என்று அறிந்து கொள்வதற்கு கூட மிக அரிதான ஒன்றாகிவிட்டது 

இதெல்லாம் காலத்தின் மாற்றம் என்று சப்பைக் கட்டு கட்டுவதை விட சில கயவர்களின் மாற்றம் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தும் எதுவும் செய்ய இயலாமல் கடந்து கொண்டு இருக்கிறோம் நம்மை அறியாமலேயே என்பதே நிதர்சனமான உண்மை ..

மாற்றங்கள் என்றாவது வந்துவிடாதா என்று எங்கும் மனங்களே மிக அதிகம் ... அவர்களோடு நானும் பயணிக்கிறேன் மாற்றங்களைத் தேடி ......






கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...