என் இதயம் பேசுகிறது .8

             என் கண்களை திறந்தவுடன் அவள் கால்களின் அருகில் இன்னொருவன் அமர்ந்திருந்தான்,நான் கண்களை லேசாக மூடியபடியே அவனை உற்று நோக்கினேன்,அவன் சுற்றி சுற்றி பார்வையால் யாராவது பார்க்கிறார்களா என்று தேடுகிறான்,பின்னர் அந்த பெண்ணை பார்க்கிறான் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று என் உள் மனது சொல்லியது அவன் உடல் அளவில் மிகப் பெரிய ஆளாக இருந்தான் நான் என்ன செய்வது என்று என் மூளையை உசிப்பிவிட்டேன்,அப்பொழுது அவன் வைஷ்ணவியின் கால்கள் மீது கையை வைக்க ஆரம்பிக்கும் போது சட்டென்று டேய் என்று பெரிதாக சத்தம் போட்டு கொண்டே அவன் சட்டையின் காலரை பற்றி சடீரென்று அவன் கன்னத்தில் அறைந்தேன் அவன் சுதாரித்து என்னை அடிப்பதர்க்குள் பக்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து அவனை பிடித்து சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டார்கள்,உடனே போலீஸ் அந்த பெட்டிக்குள் வந்தது அந்த பெண்ணை ஒரு கம்ப்ளைண்டு எழுதி கொடுக்கச் சொன்னார்கள் நான் அவளிடம் வேண்டாம் என்று தடுத்துவிட்டேன்,அவனோட லைஃப் இதோட முடிந்துவிடும் அதனால் வேண்டாம் என்று சொன்னேன் அவளும் அதற்க்கு சம்மதித்து வேண்டாமென்று அவர்களிடம் கூறிவிட்டாள்.அவர்கள் அவனை கூட்டி சென்றுவிட்டார்கள் அவளென்னை பார்த்து ரொம்ப நன்றி என்றாள் ஆனால் எனக்கு ஒரு வித பயம் என் மனதில் சுழன்று கொண்டிருந்தது அவன் திருப்பி அடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து கொண்டே அவளிடம் அதெல்லாம் எதற்கு என்று சொல்லிவிட்டு படுத்துகொண்டேன் அவளும் படுத்துகொண்டாள் நான் உடனே தூங்கிவிட்டேன் ஆனால் அவள் தூங்கவில்லை என்று காலையில் எழுந்தவுடந்தான் தெரிந்தது.அன்றைய நாள் முழுவதும் என்னை சாப்பிட வைத்து நன்றாக பேசி சந்தோஷமாக கழிந்தது மறு நாள் காலையில் இறங்கவேண்டிய இடத்தை நெருங்கி விட்டோம் அதற்கு முன்பாகவே அவளின் முகம் சோகமாக மாறிவிட்டது,ஏன் என்று கேட்டேன் எதுவுமில்லை என்றாள்,அப்பொழுதே நான் கண்டுகொண்டேன் இவள் மனதளவில் நாம் பிரிவதை எண்ணி வருந்துகிறாள் ,அவள் ஒரு பேப்பரில் ஒரு போன் நெம்பரை எழுதி கொடுத்துவிட்டு இறங்கும் போது எங்களை கண்டு கொள்ளாமல் இரங்கிச்செல்லுங்கள் எங்கள் மாமா வந்திருப்பார் அதனால் தான் இன்று மாலை நான் கொடுத்த நெம்பரில் போன் செய்து என் தம்பியின் பெயரை சொல்லி கேளுங்கள் என்றும் அவன் பேசினால் அவனிடம் உங்கள் போன் நெம்பரை கொடுத்துவிடுங்கள் நான் உங்களுக்கு பிறகு போன் செய்கிறேன் என்று தெளிவாக மிகுந்த கவனத்துடன் கூறினாள் நானும் அவள் மனம் கோனாதபடி சரி என்றேன் ஆனால் என் மனதில் ஒரு விதமான பயம் மட்டுமே இருந்தது இந்த இரண்டு இரவு ஒரு பகலில் இவ்வளவு மாற்றமா என்று எனக்கு தோன்றியது இறங்குமிடம் அவள் கண்களில் கண்ணீர் ததும்பியது எனக்கு மிகவும் மனது வழித்தது ஆனால் நான் எதுவும் பேசவில்லை பேசினால் அழுதுவிடுவாளோ என்று நினைத்து கொண்டேஇறங்க தயாராகிறேன் அவ்ர்களும் இறங்குகிறார்கள் அவள் சொன்னபடியே மாமா வந்திருந்தார் அவர்களை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினேன் போகும் முன் திரும்பி அவள் கண்களை உற்று நோக்கினேன் என் கண்களிலும் கண்ணீர் என் மனதில் அவளிடம் என்னை மன்னித்துவிடு என்று சொல்லிக்கொண்டே...................................................மீண்டும் சந்திப்போம்   

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...