Thursday, December 9, 2010

அடுத்த முதல்வர் ...

அடுத்த முதல்வர் ...                                                                        எங்கள் தமிழகத்தின் நிலையை நினைக்க நினைக்க இப்படி ஒரு புதிய சமுதாயம் வேறு எங்கும் கிடையாது என்று பெருமையாக மார் தட்டிக் கொள்ளலாம் அப்படி ஒரு புதிய உலகம் நம் தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது அதை இனி அழிப்பது என்பது இயலாத காரியம் ...
  
   டே முத்து எங்கடா இவ்வளவு வேகமா போற என்று சுப்பு கேட்கிறார்
   அண்ணே நிலம் வாங்கி விக்கிற புரோக்கர  பாக்கத்தான் போனேன் என்றேன்
  என்னடா இருக்கிற நிலம் பத்தலைய இதுக்கே மழையை காணோம் இன்னும் நிலம்
  வாங்கி என்னடா செய்யப்போற ,இருக்கிற சொத்து பத்தலைய ஒரு பையனுக்கு
 அட போங்கண்ணே நீங்க வேற நான் எந்த நிலத்தை வாங்கப் போகிறேன் என்னோட நிலத்தை விக்கிறதுக்கு சொல்ல போனேன் ,அடப்பாவி எதுக்குடா உனக்கு இந்த வேலை அவ்வளவு பணக் கஷ்டமா ? அட போங்கண்ணே எனக்கு எதுக்கு பணக் கஷ்டம் இந்த ஊருக்குள்ளயே இருந்து என்ன பண்ணுறது அப்படியே கொஞ்சம் வெளில போய் பையனுக்கு ஏதாவது ஒரு புதிய லைன்   உருவாக்கலாமேன்னுதான்
  என்னப்பா இது புதுசா இருக்கு ?அப்படி என்ன புது லைன்  ?
இப்ப புது ஐடியா ஒன்னு இருக்குதுண்ணே, ஒரு படம் எடுக்கும் அளவிர்க்கு தகுதி இருந்தாலே போதும் அதை வைத்து அதுல நம்ம பையன நடிக்க வைத்து வெற்றி பெற்றாலே இந்த சொத்து என்ன இது மாதிரி பல சொத்துக்களை நாம வாங்கி குவித்து விடலாம் 
இது எப்படி உனக்கு தோன்றியது முத்து?
 இது ஒரு பதினைந்து வருடங்களாக என் மனதில் வைத்திருந்தது தான் என்ன என் பையன் சின்னதா இருந்ததாலேபொருத்திருந்தேன் இப்ப தான் வளர்ந்துவிட்டானே பிறகென்ன கிளம்ப வேண்டியதுதான் 

அதென்ன பதினைந்து வருடம் ? 
  இப்பொ தமிழ் நாட்டை ஆள வேண்டுமென்றால் தகுதி அனுபவமல்லாம் முக்கியமில்லைன்னு அனுபவம் இருக்கிரவனைப் பற்றியும்  கவலையில்லைன்னு தெரிந்த வருடம் அப்பொ அந்த தேர்தல்ல ஒரு நடிகன் சொன்ன தலைவராகலாம் அப்படிங்கிற நிலைமை வந்துதில்ல அப்ப தான்  தெரிந்தது அப்போதைய நிலமையில அந்த நடிகர் சொன்னதுதான் நடந்தது அப்பவே நான் முடிவு பண்னிவிட்டேன் திரைப்படத் துறை தான்  நம் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது இங்கு அறிவு ,அனுபவம் ,மனித நேயம்,சமூகம் ,கல்வி இதைப் பற்றி கவலைப் படவே தேவையில்லண்ணே,தமிழகத்தை பொருத்தவரை நடிகர்கள் தான் நம் தலைவர்கள் நம்மை காக்கும் கடவுள் அம்மா அப்பா சித்தப்பா சித்தி எல்லாமே
   
சரி அதுக்கு நீ காட்ட வித்து படமெடுக்க போறயா?
 இப்பதாண்ணே முக்கிய விசயத்துக்கே வந்திருக்கிங்க உண்மைதான் நானும் காட்ட வித்து படம் தான் எடுக்க போகிறேன். இப்போ ஆரம்பித்தால் தான் இன்னும் பத்து வருடத்திற்குள் என் பையனை "புரட்சி சூறாவளி" அப்படிங்கிற பட்டதுடன் இவர்தான் தமிழ் நாட்டை காப்பாத்துவார் அப்படிங்கிற நினைப்பை நான் எடுக்கும் படங்களின் மூலம் மக்களிடம் பதிய வைப்பேன். அவ்வளவுதான் அடுத்த முதல்வர் என் பையன் தான்!.


இது எல்லாம் நடக்கிற காரியமா? 
  இதுக்கென்ன இப்ப சமீபமா நம்ம தம்பி விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கலையா? நம்ம சரத்குமார் ஆரம்பிக்கலையா? அவங்க யாரு நடிகர்கள் தானே அதுக்கு முன்னாடி ஆட்சி செய்தவர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா,இன்றைய கலைஞர் வரை சினிமாக்காரங்க தானே அப்பொ இதிலிருந்து என்ன தெரியுது சினிமா தான் தமிழகம் அதிலிருந்தாதான் நாட்டை ஆள முடியும் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியும் அப்படின்னு நான் தெரிஞ்சிகிட்டேன்  என் பையன இப்பொ இருந்து ஆரம்பிச்சா இன்னும் பத்து வருடத்தில் என் பையன் தான் முதல்வர்.
 
  எப்படி சொல்றான் இவன் அப்படின்னு தானே நினைக்கிறீங்க?
  இங்கே இருக்கிற மக்களை நான் ரொம்ப நாளா பார்த்துகிட்டு தான் இருக்கேன் அதுவும் இந்த பத்து வருடத்தில் உண்மையிலேயே நம் மக்கள் அதுவும் நம் இளைய சமுதாயாம் பல முன்னேற்றங்கள்,நடிகனுக்காக மொட்டை போடுதல் ,மாலை போடுதல்,அலகு குத்துதல்,சிலை வைத்தல்,கட் அவுட் வைத்தல்,நடிகருக்கு பாலாபிசேகம் நடத்துதல் என்று பல முன்னேற்றங்கள்,தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறானோ இல்லையோ நடிகனின் பிறந்த நாளைக் கொண்டாட தவறுவதில்லை,தன் தாய் உயிர் போகும் நிலையில் இருந்தால் கூட தன் நடிகனின் படம் வெளியிடும் முதல் காட்சியை பார்த்துவிட்டு தான் தன் தாயை   பார்க்கிறான் அப்படின்னா இங்க யார் முக்கியமானவர்கள்?
         
  இன்னும் பல விசயங்கள் சொல்லலாம்ணே ஆனா ரொம்ப சீக்கிரம் நிலத்தை வித்தாகணும் நாள் ரொம்ப குறைவா இருக்குதுண்ணே உங்களுக்கு 
  தெரிந்தவர்களிடமும்
  சொல்லுங்கண்ணே, 


எதுக்குடா இவ்வளவு அவசரமா விற்கவேண்டும்?
  உங்களுக்கு விசயமே தெரியாதாண்ணே,அடுத்து சினிமா துறையிலிருந்த இன்னொரு எம் ஜி ஆரும் அடுத்த மாதம் கட்சி ஆரம்பிக்கப் போறாருண்ணே,அவரும் வந்துட்டாருணா அந்த இடத்தை எம் பையனை பிடிக்க வைக்க வேண்டும் அதனால் தான் என்ன யாருன்னு தெரியலையாண்ணே,அதாண்ணே இப்ப சில படங்கள்ல மக்களை காப்பத்தர மாதிரியே நடித்து படம்  ஓடுலைனாலும் தான் ஒரே பாதையில் மக்களை காப்பற்ற அடுத்து காவலன் படத்திலும் நடித்த நம்ம விஜய் தம்பி தாண்ணே அவங்க அப்பா எப்படி அவருக்கு உறுதுணையாய் இருந்து 
  முன்னேற்றுகிறாரோ அதே பாணியில் நானும் ரெடி வரட்டுமாண்ணே


           அடக்கடவுளே இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வேன் என்று புலம்பிக் கொண்டே கிளம்புகிறார்

 ஹலோ ஹலோ எங்கே போறீங்க இதுக்கு உங்க கருத்துகளையும் ஓட்டுகளையும் பதிவு செய்துவிட்டு போங்க...............    

10 comments:

  1. எதுவேண்டுமானாலும் நடக்கலாம் நம் தமிழகத்தில்........

    ReplyDelete
  2. nam tamilakame nadikarkalai kondaaduvathil thaan perumaiyaaka ninaikkirathu..........

    ReplyDelete
  3. nanba!! mannikkavum! englishil type seythatharkku!
    Samoogathin appattamaana nilayai solli kaari umizhnthulleergal! Echam en meethum pattullathu! erkenave naanum en pangirkku oru pathivai pottullen! Mudinjaa santhippom! VAA!ena anbodu azhaikkum anbu sagotharan!

    pl visit., like some different post.,

    தமிழகம்-- 1,00,000 பகுதிநேர அரசியல்வாதிகள் தேவை!!! சமூக சேவையாற்ற!!!
    http://saigokulakrishna.blogspot.com/2010/12/100000.html

    ReplyDelete
  4. viraivil nanum varukiren super idea..

    ReplyDelete
  5. ஐயோ இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே...

    ReplyDelete
  6. இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...