Thursday, March 31, 2011

ஒரு அதிர்ச்சி தகவல்


ஒரு அதிர்ச்சி தகவல்

இது பலருக்கு பிடிக்காத விசயமாக இருக்கலாம் பலருக்கு இது பொழுது போக்கு விசயமாகவும் இருக்கலாம் பலரின் பொழுது போக்கிற்கும் ஆபாசத்திற்கும் பயன்படும் இணையத்தளம் பல நல்ல விசயங்களை முன் நிறுத்துவதில் பின் தங்கியே  இருக்கிறது இது மிகவும் துரதிஷ்டவசமானது 

இணையத்தளம் என்பது உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மற்றவர்களுக்கு மிக விரைவாக அனைத்து மக்களையும் சென்றடையும் மிக அறிய கண்டுபிடிப்பு 

இது பலரின் வக்கிர எண்ணங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பல தளங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ,இதில் பலருக்கு பொழுதுபோக்கு என்பதே பிரதானமாக இருக்கிறது பல உண்மை செய்திகள் கூட இவர்களை போல் இருப்பவர்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது 

சரி ஒரு முக்கிய தகவலை தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் 


இன்னும் பத்து ஆண்டுகளில் உண்ண உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்தும் நிலையை நாமே உருவாக்கி கொண்டிருக்கிறோம் 

 இதை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை அரசியல் பிழைப்பு நடத்தும் பல வியாபாரிகளுக்கு எடுபுடிகளாக தன்னை முதன்மைப் படுத்துவதிலும் ஒரு நடிகனுக்காக தன வாழ்க்கையை அழித்துக் கொள்வதிலும் முதன்மை பெறுவதில் தான் நாம் முன்னேற்றம்  பெற்று இருக்கிறோமே தவிர
தன இனமே அழியப்போகிறது என்ற கவலை  சிறிதும் இல்லாமல் 
இந்தியா உலக நாடுகளிலேயே  குடிநீரில் எப்பொழுதும் யாரிடமும் கையேந்தும் நிலை வரவில்லை ஆனால் நாம் முன்னேற்றம் என்ற பெயரில் நம் வளங்களை நாமே அழித்துகொண்டிருக்கிறோம்

இந்த நிலையை உணர்வதற்கும் யாரும் தயாராக இல்லை நம் வளங்களை சுரண்டுவதில் மட்டும் அந்நியர்களை உள்நாட்டு சுரண்டல்காரர்கள் என்பதைவிட அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று கூறுவதே மிகசரியாக இருக்கும் 

நம் குடிநீரை பதினைந்து ரூபாய் கொடுத்து நாமே வாங்கி அருந்துகிறோம் நமக்கு எந்த குற்ற உணர்வும் கிடையாது கேட்டால் சுத்தமான குடிநீராம் அசுத்தம் செய்வதே நாம் தான் அதை சுத்திகரிக்க செய்வதும் நாம் தான் 
காடுகளையும் வேளாண்மை நிலங்களையும் அழித்து நம் ஆடம்பர பங்களாக்கள் கட்டி வாழ்வதில் மிக உறுதியான நிலையில் அனைத்து உறவுகளையும் விட்டு தனிமையில் வாழ்வதிலே அதிக நாட்டம் நம்மிடையே மிகஅதிவேகமாக பரவிவருகிறது


ஒவ்வொரு தவறுகளையும் நாமே செய்து கொண்டு நம் இனம் அழிவதற்கும் நாமே காரணமாகிகொண்டிருக்கிறோம்  

 உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள்.............................


5 comments:

  1. உண்மையிலே அதிர்ச்சியான விஷயம் தான்.இன்றைய பகட்டான நமது வாழ்க்கை, இப்படியே போனால் சோமாலியா நாட்டு நிலை நமது சந்ததினருக்கு வரும்.
    நமது முன்னோர் விட்டு சென்ற எச்சங்களின் பரிசளிப்பில் சந்தோசமாக இருக்கிறோம் என்றால்,நாம் நமது சந்ததினருக்கு அத்தகைய சூழ்நிலையை விட்டு செல்ல வேண்டும்.ஆனால்,அது பற்றி கவலைப்படுவதில்லை.

    ReplyDelete
  2. நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்த பொக்கிசம் இது ஆனால் இன்று அதை அழிப்பதில் மட்டுமே குறியாய் ..............

    ReplyDelete
  3. ஏன் என்று ஒரு முறை கூட சிந்திப்பதில்லை ........

    ReplyDelete
  4. அருமையான பதிவு இதை பார்த்தாவது யோசிப்பார்களா?

    ReplyDelete
  5. நல்ல பதிவு, அனைவரும் சிந்திக்கவேண்டும் !

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...