Monday, April 9, 2018

காலத்தின் மாற்றமல்ல இது கயவர்களின் மாற்றம்


  இது நிச்சயமாக காலத்தின் மாற்றமல்ல, சில கயவர்களின் நயவஞ்சகத்தால் ஒட்டு மொத்த மக்களின் நிலையும் மாற்றத்தை கண்டுள்ளது, என்பதை விட மீளா துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறது என்பதே உண்மை. 

படிப்பு படிப்பு என்று படிக்க வைக்கபட்டவர்களை  விட, மிக அதிகமாக குடிக்கவைக்கப் பட்டவர்களே அதிகம். படித்தவரும் பாழாகிப்போன நிலை பாமரனின் வாழ்வை விட படித்தவனின் வாழ்வே திண்டாட்டமாக இன்று,

ஒருவனின்  சுய இலாபத்திற்கு பயன்படுத்தப் படுகிறார்கள் மற்ற ஏழ்மையானவர்கள் அனைவருமே .  அவனது பணத் தேவையை தெரிந்து கொண்டு தன் குடும்பம் சொகுசாக வாழ அவனுக்கு சிறிது சிறிதாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிச்சையிடுகிறான், இவனும் வாங்கி தின்னுகிறான் இந்த நிலைக்கு காரணம் தேவைகளை அதிகப்படுத்தி பணத்தாசை பிடித்த மிருகங்கள் தன பண பசிக்கு அவர்களை இரைகளாக பயன்படுத்துவது தெரியாமல் பிச்சை எடுக்கிறார்கள் தன ஓட்டுக்களைக் கூட விற்று தின்னுகிறான் வாங்கும் பணம் தன்னுடைய வரிப்பணத்தில் வந்ததென்றே தெரியாமல் .

விளம்பரம் விளம்பரம் விளம்பரம் எங்கு நோக்கினும் இது மட்டுமே அதை மக்களின் மனதில் பதிய வைத்து அதை பயன்படுத்தி விற்று பணம் தின்னும் பேய்கள் இந்த சில  ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கின்றன 

அன்று வாழ்ந்த மனித இனங்கள் காட்டு விலங்குகளுக்கு மட்டுமே அஞ்சி வாழ்ந்தான். இன்றோ உடன் வாழுபவேனே மிருகமாய் மாறி விட்ட முன்னேற்றமான காலம் இது. எவன் உண்மையானவன் என்று அறிந்து கொள்வதற்கு கூட மிக அரிதான ஒன்றாகிவிட்டது 

இதெல்லாம் காலத்தின் மாற்றம் என்று சப்பைக் கட்டு கட்டுவதை விட சில கயவர்களின் மாற்றம் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தும் எதுவும் செய்ய இயலாமல் கடந்து கொண்டு இருக்கிறோம் நம்மை அறியாமலேயே என்பதே நிதர்சனமான உண்மை ..

மாற்றங்கள் என்றாவது வந்துவிடாதா என்று எங்கும் மனங்களே மிக அதிகம் ... அவர்களோடு நானும் பயணிக்கிறேன் மாற்றங்களைத் தேடி ......






2 comments:

  1. //படிக்க வைக்கபட்டவர்களை விட, மிக அதிகமாக குடிக்கவைக்கப் பட்டவர்களே அதிகம்.//

    //ஓட்டுக்களைக் கூட விற்று தின்னுகிறான் "வாங்கும் பணம் தன்னுடைய வரிப்பணத்தில் வந்ததென்றே தெரியாமல்"//

    உங்கள் ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    //மாற்றங்கள் என்றாவது வந்துவிடாதா என்று எங்கும் மனங்களே மிக அதிகம் ... அவர்களோடு நானும் பயணிக்கிறேன் மாற்றங்களைத் தேடி ......//

    மாற்றங்கள் வரும் என காத்திருப்பதைவிட, அவைகளை உருவாக்க வழி தேட வேண்டியது அவசியம். இன்றைய சமுதாயத்தில் பணமும் அதிகாரமும் ஒரு சில தீய சக்திகளிடம் அகப்பட்டு கொண்டதே இவைகளுக்கு காரணம் மற்றும் பிரச்சினை.

    ReplyDelete
  2. தீய சக்திகளை கொண்டுவந்ததே நாம் தானே . இப்பொழுதும் மாறவில்லையே இன்றும் யாரவது பணம் கொடுப்பார்களா என்று தானே பிச்சைக்கு கையேந்தி நிற்கிறோம் ...........

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...