Tuesday, August 24, 2010

 என் இதயம் பேசுகிறது -3 வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கங்கள் என் இடுகைகளை படித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை மறவாமல் எழுதுங்கள் உங்கள் கருத்துக்களே எனக்கு நீங்கள் கொடுத்த மாபெரும் பொக்கிஷம் சரி ரொம்ப சோதிக்காமல் என் இதயம் பேசுகிறது  மூன்றாவது பதிப்பிற்கு செல்கிறேன்                                                                                                    நான் புறப்படுவதற்கான காரணம் சொல்லவேண்டுமென்றால்,என் பெற்றோர்கள் தான் என்னடா இது புது கதையாய் இருக்கிறது என்று யோசிக்கிரிர்களா ?அதுவும் அன்பினால் தான்,தயவு செய்து அதை வரும் நாட்களில் சொல்லுகிறேன் இப்பொழுது ஆரம்பித்தால் இதன் போக்கே மாறிவிடும்.                                                                                                                               நான் புறப்பட்டுவிட்டேன் என் முதலாளி அலுவலகத்தில் இருந்து இரயில் நிலையத்திற்கு  ஆள் கொண்டுவந்து விட்டார்,அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நேராக                                                                நிலையத்திற்குள் நுழைகிறேன்.என் மனதில் ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம் சந்தோசம் என் குடும்பத்தை விட்டு பிரிவது வருத்தம்,முதன் முதலாக இரயிலில் பயணம் அதுவும் இரண்டு நாட்கள் என் வாழ்க்கையின் முதல் பயணம் டிக்கட் கௌண்டர் வரிசையில் சென்று நின்றேன்,அங்கு எனக்கு தெரிந்த ஒருவராவது இருக்கிறார்களா என்று சுற்றும் தேடிப்பார்க்கிறேன் யாருமில்லை,சரி டிக்கெட்எடுத்துவிட்டு நேராக உள்ளே செல்ல முற்படும்போது,ஒரு ஞாபகம் வந்தது இரண்டு நாட்கள் போன் செய்ய முடியாது என்று பக்கத்தில் இருந்த டெலிபோன்                                                                                                       பூத்தில் நுழைந்து என் வீட்டிற்கு போன் செய்தேன் ரிங் போகிறது,ஆனால் யாரும் எடுக்கவில்லை முழு ரிங்கும் சென்று கட்டாகிவிட்டது,மீண்டும் முயற்சிக்கிறேன் ஆனால் யாரும் எடுக்கவில்லை அப்பொழுது நான் செல்ல வேண்டிய இரயில் இரயில் 
                                                        நிலையத்திற்குள் வந்துகொண்டிருக்கிறது என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கிறார்கள்,எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இறுதியாக ஒருமுறை முயற்சி செய்கிறேன் ரிங் போகிறது போகிறது,போகிறது............................... ..............மீண்டும் சந்திப்போம்.................                                                                                                                                                                                             


No comments:

Post a Comment

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...