Monday, August 23, 2010

என் இதயம் பேசுகிறது.2

என் இதயம் பேசுகிறது தொடர்ச்சி .2...                                                                                               நான் புறப்படுகிறேன், இன்னும் புறப்படவில்லையா என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது, அதற்கு முன்னாள் என் குடும்பத்தை பற்றி சில ......என்ன பெரிய குடும்பம் பெரிய அரசியல் தலைவரா,அல்லது, பெரிய அறிவியல் மேதையா, அல்லது பெரிய நடிகரா, அவர்கள் குடும்பம் தான் சொன்ன உடனேயே ஞாபகம் வரும்,அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லைனாலும் அவர்களைவிட சந்தோசமான குடும்பம் என் குடும்பம், ரொம்ப போர் அடிக்கிறேனா, மன்னித்துவிடுங்கள்,பெரிய குடும்பம் அல்ல நான் ஒருவன் மட்டுமே என் குடும்பத்தின் சொத்து,                                                      என் தந்தை தாய் இருவர்க்கும் செல்லபிள்ளை,என் உடன் பிறப்புகள் யாரும் இல்லை என்பதை விட,நான் மட்டுமே போதும் என்று என் பெற்றோர்களின் விருப்பமும் ஆசையும் கூட,அதனால் தான் எனக்கு அணைத்து பாசங்களையும் ஊட்டி வளர்த்தார்கள் ,எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் என் தாதா பாட்டி அப்பா அம்மா நான் ,எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்,                                             மற்ற சொந்தங்களை பற்றி வரும் பாகங்களில்  கூறுகிறேன்.சரி நான் வீட்டில் இருந்து  புறப்பட்டு விட்டேன், அம்மாவிடம் நான் நமக்காக தான்   செல்கிறேன்,என்னை தடுக்கவேண்டாம் என்று கூறிவிட்டு நேராக                                                                தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றேன்.அவரிடம் முன்பே சொல்லியதின் மூலம் ஒரு தனியார்  போக்குவரத்துக்கு மேலாளராக எனக்கு வேலை கிடைத்தது.அதுவும் என் ஊரிலிருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் செல்லவேண்டும்.மொழி தெரியாத ஒரு இடத்திற்கு செல்லவேண்டும்.ஆனால் நான் எதற்கும் தயாராக இருந்தேன்.எப்படி இந்த வயதில் இப்படி ஒரு பதவி கிடைத்தது என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.என் உறவினரின் சிபாரிசுக்கு அப்படிஒரு மரியாதை,  மனதை கால்லாக்கி கொண்டு என்னை பதினேழு ஆண்டுகள் பிரியாமல்  வளர்த்த என் பெற்றோர்களை விட்டு நான்  புறப்பட்டுவிட்டேன்.                                                                                                          நான் புறப்படுகிறேன் அதற்க்கான காரணம் நாளை ...........................................       

3 comments:

  1. romba nallaa irukku

    ReplyDelete
  2. இன்னும் உங்கள் ஆதரவோடு விருவிருப்பு தொடரும்

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...