Saturday, February 26, 2011

தலா 11 லட்சம்


        தினமும் வெளியே புறப்படும் பொது திரும்ப வீடு வந்து சேர்ந்தால் தான் நிஜம் என்ற நிலை இப்பொழுதெல்லாம் வாகனத்தின் பெருக்கம் சாலைவிதிகளை மதிக்காத பயணம் அப்படி ஏதும் நிகழ்ந்துவிட்டால் உடனடியாக காப்பாற்ற வலி இருந்தும் காப்பாற்ற முடியாத நிலை அதற்கான ஒரு அதிரடி சட்டம் .........

அந்த தங்கமான நிமிடங்கள் 

சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . விபத்தில் சிக்கியவர்களை கொண்டுபோய் சேர்த்தால் கூட பிழைப்பது அரிதாகத்தான் இருக்கிறது .


கேட்டால் "ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொண்டுவந்திருந்தால் ஒரு வேளை காப்பாற்றி இருக்கலாம் " என்று சொல்கிறார்கள் .மருத்துவ உலகில் இந்த நேரத்தை "கோல்டன் ஹவர்ஸ் " என்கிறார்கள் சாலையில் விபத்தில் சிக்கியவர்களை ,ஒரு சிலர் காப்பாற்ற நினைத்தாலும் நமக்கெதற்கு இந்த வீண் பிரச்சினை போலிஸ் விசாரணை என்று வந்தால் யார் பதில் சொல்லுவது ?மேலும் மருத்துவமனையிலும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்களே என்பதால் தான் ஒதுங்கிகொள்கிறார்கள்.


இந்த பிரச்சினைக்கு கேரளா சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஸ்ணன் அருமையான தீர்வு சொல்லி இருக்கிறார் விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் பலர் உதவி செய்வதில்லை இனிமேல் யாரும் அப்படி பயப்படத்தேவையில்லை , சாலை விபத்தில் சிக்குபவர்களை உடனடியாகத் தங்கள் காரிலோ அல்லது வேறு வாகனத்திலோ கொண்டு சென்று அருகில் உள்ள மருத்துவமனியில் சேர்ப்பவர்களுக்கு இனிமேல் சன்மானம் வழங்கப்படும் என்று அர்வித்து இருக்கிறார்.


இதற்காக ஒவ்வொரு எஸ் பிஅலுவலகங்களுக்கு தலா பதினோரு லட்சம் ஒதுக்கவும் செய்திருக்கிறார் எந்த காரணம் கொண்டும் வழக்குத்தொல்லை இல்லை போலீஸ் தொந்தரவு இருக்காது என்று அமைச்சர் உறுதியளித்து இருப்பதால் இனி மனிதர்கள் பயமின்றி மனிதபிமானத்துடன் செயல்பட முடியும்


 இந்த விசயத்தில் கேரளாவை போல அனைத்து மாநிலங்களும் பின்பற்றலாமே?


ஓட்டு போடா மறந்துவிட்டீர்களே ? 
தவறாமல் ஓட்டு போடுங்கள் 

5 comments:

  1. இப்படி அனைத்து மாநிலங்களிலும் அமுல்படுத்தினால் பல உயிர்கள் கட்டாயம் காப்பாற்றப்படும் ........

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள்.........

    ReplyDelete
  3. இங்கு பணத்தை பங்கு போட மட்டுமே ஆட்கள் இருக்கிறார்கள் சட்டம் போட அல்ல...........

    ReplyDelete
  4. மிக அருமையான சட்டம்

    ReplyDelete
  5. சபாஷ்.. சரியானதுதான்.........
    சன்மானம் தேவையில்லை.. வழக்கு போட்டு தன்மானத்தை வாங்காமல் இருந்தால் நலம்...

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...