Monday, February 7, 2011

எங்களை காப்பாற்றுவீர்களா........?

அன்பு வணக்கம்.......
  இது எரிந்து கொண்டிருக்கும் தீக்குச்சி,ஈரம் வேண்டிய விண்ணப்பம் அல்ல தீக்குச்சி என வினைத்து தீயில் இடப்பட்ட எழுது கோலிர்க்காண இரங்கல் கடிதம்......

எழுத வேண்டிய பொருளை எரியூட்டுவது சரியா? பள்ளிக்கு செல்லவேண்டிய பச்சிளங் குழந்தைகளை பணிமனைக்கு அனுப்புவதைப் போல உழைக்கும் சிறார்களை ஊக்கப்படுத்தி உழைப்பை உறிஞ்சும் ஈனர்களே உங்களுக்கு இன்னுமா உரைக்கவில்லை இந்தியாவின் வல்லரசுக்கு இதுவும் இடையூருதான் என்று............

நாளைய இந்தியாவின் வல்லரசு மட்டுமல்ல வளர்ச்சிக்கும் குழந்தைகளின் பங்கு அவசியம் என்பதை என் மறந்து போனோம் என்பது மட்டும் ஏன் இன்னும் புரியவில்லை எத்தனையோ மாற்றங்கள் ஏராளமான மறுமலர்ச்சிகள் சிறப்பான சீர்திருத்தங்கள் பறைசாற்றும் பகுத்தறிவு என அத்தனை இருந்தும் வேர்புழுக்களாக வேரூன்றி விட்ட குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க முடியாமல் போன காரணம் ஏனோ ?குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை கோழைகள் என்றால் குற்றமில்லை என்றான் ஓர் பேனாக்காரன் .

மனிதநேயமற்ற மாக்களின் (விலங்கு) இரக்கமற்ற அரக்க குணத்திற்கு ஏன் குழந்தைகளை பலியாக்க வேண்டும் .ரோஜாவை சுமக்கும் மண்ணில் மண்ணை சுமக்கும் இந்த ரோஜாக்களை பார்க்கும் போது உள்ளத்தில் இருந்து உதிரம் சிந்தவில்லையா? உதிரம் இல்லை ஒரு துளி கண்ணீராவது சிந்தியிருந்தால் கூட இந்த அவல நிலை அரங்கேறி இருக்காது வளர்ந்த நகரம் முதல் நலிந்த நகரங்கள் வரையில் ஆம் பணம் படித்த சமூகத்தில் கண்ணாடி கதவுகளுக்கு பின்னாலும் இருட்டு தொழிற்சாலையின் இரும்பு கைப்பிடி இடுக்குகளில் உணவகங்களில் எச்சத்தின் மிச்சத்தை எடுத்துப் போட கதவற்ற கிராமங்களில் கால்நடை சகதிகளில் என எங்கு நோக்கிலும் குழந்தைகளின் உழைப்பை உறிஞ்சி தோரணம் என்ற பெயரில் தூக்கில் இடும் கொடுமையினை எத்தனை காலம் தான் ஏற்பது...?

இடங்கள் மட்டும் தான் வேறு வேறு ஆனால் இழப்பு ஒன்று தான் ஆனால் நாம் இழந்து கொண்டிருப்பது இந்தியாவின் எதிர்காலம் என்பதை உணரவேண்டியது அவசியம் ஓ  மனிதர்களே அது என்ன புதுமை கலாசாரம் .?

சம்பளம் குறைவு என்பதற்காக சிறுவர்களை பணியில் அமர்த்துவது ? செய்கூலி குறைவு என்பதற்காக சிற்பத்தினையே மண்சுமக்க வைக்கும் மனிதநேயமற்ற சிற்பிகள் ,சமுதாயத்தின் சாபக் கேடுகள், எங்கள் நாடு தொழில் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது கணினி துறையில் கணக்கற்ற சாதனை படைத்துள்ளது ஏற்றுமதி இறக்குமதியில் எங்களை மிஞ்ச எவருமில்லை என பட்டாடை உடுத்தி பகட்டு காட்டும் பாழடைந்த சமுதாயமே உனது காலடியில் சற்று உற்றுப்பார் கந்தல் துணிகளின் கசங்கலில் தன் கண்ணீர் துளிகளை சங்கமித்து குழந்தை தொழிலாளி என்ற மடத்தனமான முகவரியோடு மண்ணாகிவிட்ட ஓர் ஆற்றல் மூலக் கூற்றினை சற்று உற்றுப்பார் உறுத்தவில்லையா உங்களுக்கு ?.

உடையில் ரோஜாவையும் உள்ளத்தில் முள்ளையும் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் ஒன்றிணைத்து கொண்டாடுகிறீர்களே ஓர் குழந்தைகள் தினவிழா உள்ளம் உறுத்தவில்லையா உங்களுக்கு ?

தன் குடுமபம் ஒளி பெற சிவகாசியில் எரிந்து கொண்டிருக்கும் சிவப்பு ரோஜாக்களையும் இரும்பு தொழிற்சாலையில் இட்டு சாயம் பூசப்பட்ட ஈர இதையங்களையும் பண முதலைகளின் பணிவிடைக்கு பணியமர்த்தப்பட்ட உயிருள்ள கேள்விக்குரிகளையும் இணைத்து இன்னும் வலுவிழந்து போன கிராமத்தில் ஒளியிழந்து போன ஓலைக்குடிசைகளில் கால்நடைகளுடன் கலந்து விட்ட இறந்தகால இந்தியாவை மீட்டெடுக்க இனியேனும் முயற்சிப்போம் இந்த முயற்சிக்கு தடையாக எது வந்தாலும் அதை அகற்றுவோம் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்பான குழந்தைகளை குழந்தை தொழிலாளர்கள் எனப் பிரகனப் படுத்தும் அகராதி 

                   தீமை என உணர்த்துவோம் அன்றில் அதனை 
                   தீயிட்டு கொளுத்து வோம்  


இது என் உள்ளத்தை என் நட்பால் வெளியிடப்பட்டது .................

இதை படித்து தங்களின் உள்ளத்தின் கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள் ...........

2 comments:

  1. இது ஒவ்வொரு குழந்தையின் கதறல் ..............

    ReplyDelete
  2. குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை உருவாகிட வேண்டும்................

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...