Sunday, November 7, 2010

ஐயோ இது உண்மையா ? தொடர்ச்சி .2

 அந்த அலறல் சத்தம் கேட்டவுடன் அவர்கள் இருவருடைய இதயமும் நின்றேவிட்டது ஒரு நிமிடம் அதே நேரம் அந்த வெளிச்சமும் அதே இடத்தில் நின்றது பின்னர் சற்று பாதையை விட்டு விலகி காட்டிற்க்குள் சென்று ஏரியின் பின் பகுதியில் சென்று இவர்களுக்கு நேராக நின்றது,இவர்கள் இருவருமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயத்தில் மயக்கம் போட்டு அந்த மரத்தடியிலேயே விழுந்துவிட்டனர்


      அவர்கள் பின்னால் வந்த ஒருவர் மரத்திற்க்கு பின்னால் ஒழிந்திருக்கும்போது அவரை ஏதோ காலில் பலமாகக் கடித்துவிட்டது அந்த வலி தாங்கமுடியாமல் தான் பலமாக கத்தியிருக்கிறார் அவரும் சிரிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்து விட்டார், அவர்கள் மூவரும் மயங்கிய பிறகு சிறிது நேரம் கழித்து அந்த ஒளி அவர்களை நோக்கி வருகிறது
   அவர்களின் முகத்தில் காலைக் கதிரவனின் வெப்பக் கதிர்கள் தன் முகத்தில் பட்டவுடன் கண் விழித்தனர் விழித்துப் பார்த்தால் மூவருக்குமே அதிர்ச்சி,ஒருவரை       ஒருவர் பார்த்துக் கொள்கிறனர் முதலில் அவர்களின் பெயர்களைச் சொல்லி விடுகிறேன் முதலில் வந்த இருவரில் ஒருவரின் பெயர் முத்தையன்,இன்னொருவர் கந்தவேல்,அவர்களை பின் தொடர்ந்து வந்தது வேறு யாருமல்ல கந்தவேலின் அண்ணண் மகன் முருகன் தான் முருகனும் வெளியூருக்கு சென்று திரும்ப தாமத மாகிவிட்டது அதனால் காட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த போது இவர்கள் இருவரும் வருவதைக் கண்டவுடன் அவன் ஒழிந்து கொண்டான் அதற்க்கான காரணமும் இருக்கிறது அதை பிறகு கூறுகிறேன் அவர்கள் முன்னால் சென்றவுடன் இவனும் பின்னாலேயே சென்றுவிடலாம் என்று தான் மறைந்து கொண்டான்,அவர்கள் முன்னால் சென்றதும் பின் தொடர்ந்து சென்றான்
  
   முருகனைப் பார்த்தவுடன் கதிர்வேல் ஒரு நிமிடம் ஆடித் தான் போய்விட்டார்,பழையதையெல்லாம் மறந்து அவனிடம் பாசமாக நீ எங்கேயடா வந்தாய் நீயா இரவில் அலறியது அவனும் ஆமாம் ஏதோ காலில் கடித்து சதையப்பிய்த்துவிட்டது என்று கடிபட்ட இடத்தை பார்த்தால் காலில் எந்த விதமான காயமும் இல்லை பலத்த அதிர்ச்சி அதைவிட மிகுந்த அதிர்ச்சி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை அடர்ந்த வனத்திற்க்குள் ஒரு மிகப் பெரிய மரத்தின் கீழே இருந்தனர் அங்கு மனித நடமாட்டத்திற்க்கான எந்த வாய்ப்பும் தெரியவில்லை ,இரவு நடந்தது ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது ம்யக்கமடைந்தது வரை தெரிகிறது,அதற்க்குமேல் எப்படி இங்கு வந்தோம் எப்படி காலில் ஆன காயம் காணாமல் போனது நாம் இப்பொழுது எங்கே இருக்கிறோம்
 
     அப்பொழுது ஏதோ பெரிய சத்தம் கேட்டது பறவைகள் அனைத்தும் நான்கு திசைகளிலும் ஆபத்து வருவதைப் போன்று அலறின,ஏதோ அவர்களை நோக்கி வருகிறது.................................   


இது ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதே இன்னும் பல த்கில் அனுபங்கள் உங்களுக்காக ............................மீண்டும் நாளை

    தவறாமல் கருத்துரைகளையும் ஓட்டுகளையும் அளியுங்கள்  

4 comments:

  1. இன்னும் விரு விருப்புடன் பல உண்மைகளுடன் உங்கள் முன்னால்...........

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக இருக்கிறது தொடருங்கள் உங்கள் பயணத்தை

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகளில் எப்பொழுதுமே உண்மை கலந்திருக்கும் நீங்கள் சொல்லவே வேண்டாம் வாழ்த்துக்கள் நவ்ஜோனி

    ReplyDelete
  4. பலர் சொல்லி நானும் கேட்டதுண்டு இது போல நடந்த பல உண்மைகள்

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...