Thursday, November 18, 2010

ஐயோ இது உண்மையா .3

ஐயோ இது உண்மையா .3
                  
             ஏதோ ஒரு பெரிய சத்தம் ஏதோ அவர்களை நோக்கி வரும் சத்தம் கேட்டவுடன் மூவருக்கும் ஒரு கணம் என்ன செய்வதென்று புரியவில்லை சட்டென்று முருகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த செடிகொடி அடங்கிய புதருக்குள் சென்று மறைந்து கொண்டனர் 
   சத்தம் மிக அருகாமையில் கேட்டது இப்பொழுது நிறைய சத்தங்கள் கேட்டது  புதரின் அருகில் வரும்போது தான் தெரிந்தது அவை கரடிகள் என்று அவைகள் அனைத்தும் அந்த பெரிய மரத்தின் கீழே நின்று விளையாட ஆரம்பித்தன இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவர்களுக்கு தண்ணீர் தாகம் அதிகமானது ஆனால் வெளியே சென்றால் உயிரே போய்விடும் என்ன செய்வது அப்பொழுது 
  
  திடீரென்று ஒரு கரடி அந்த புதரையே உற்று நோக்கியது,பின்னர் மெதுவாக அந்த புதரை நோக்கி வர ஆரம்பித்தது இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது  என்னசெய்வதென்றே தெரியவில்லை சட்டென்று முருகன் தன்னருகே காய்ந்த மர கட்டை ஒன்று  கிடந்தது அதை கையில் எடுத்துக் கொண்டான் எது நடந்தாலும் தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு அதை தாக்க தயாரானான் அவர்கள் எங்களால் அதிக தூரம் ஓடக்கூட முடியாது பொறுமையாய் இரு என்று சமாதானம் செய்தார்கள்
  
   புதருக்கு அருகில் வந்து விட்டது நுகர்ந்து பார்க்கிறது தன் முகத்தை புதரில் நுழைக்க முற்படும் போது அதற்க்கு பின்னால் இன்னொரு சிறிய கரடி அதன் மீது வந்து வேகமாக மோதி விளையாடியது சட்டென்று திரும்பி அதனுடன் விளையாட ஆரம்பித்து விட்டது 
  சிறிது நேரத்தில் அங்கிருந்து அனைத்தும் வேறொரு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டன அப்பொழுது தான் தன் சுயநிலைக்கு  திரும்ப ஆரம்பித்தனர்,அங்கிருந்து வெளியே வந்தனர் 
  முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் பின்னர் எது நடந்தாலும் சரி என்று தண்ணீர் இருக்கிமிடம் தேட ஆரம்பித்தனர் அதற்க்கு அவர்களுக்கு அதிக நேரம் தேட அவசியமில்லாமல் சிறிது தூரத்திலேயே தண்ணீர் ஓடும் சல சல சத்தம் கேட்டது அந்த திசையை நோக்கி வேகமாக நடந்து சென்று பார்த்தால் அங்கு மிகப் பெரிய ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது அதில் ஓடும் தண்ணீர் எந்த வித அசுத்தமும் இல்லாமல் அவ்வளவு சுத்தமாக இருந்தது மூவரும் வேகமாக  சென்று தண்ணீரை தொட்டவுடன் வேகமாக கையை பின்னோக்கி இழுத்தனர் அவ்வளவு குளிர் மையாக இருந்தது ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெதுவாக அருந்த ஆரம்பித்தனர் ,தண்ணீர் உள்ளே செல்ல செல்ல அவர்களுக்கு ஒரு இனம் புரியாத் சக்தி ஒன்று தன்னுள் நுழைவதாக உணர்ந்தனர் 
   
   அதனருகே சிறிது தூரத்தில் ஏதோ பழங்களின் தோட்டங்கள் இருப்பதைக் கண்டனர் அங்கே சென்று பார்த்தால் பல வகை பழங்கள் காய்த்து தொங்கின பறித்து சாப்பிட்டு பசியாரினர் அங்கேயே ஒரு மரத்தின் அடியில் படுத்தனர் படுத்தவுடன் சோர்வினால் உறங்கிவிட்டனர் கண்விழித்து பார்த்த போது மாலை நேரமாகி சூரியன் மறையத் தொடங்கிவிட்டது ,அப்பொழுது தன் சுய ஞாபகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்தன ,இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் ,எப்படி நம் ஊருக்கு செல்வது நாம் உயிரோடு திரும்பி செல்வோமா என்று பயம் உருவாகியது இன்றும் இந்த காட்டில் தான் இருக்க வேண்டுமா ? என்று மூவரும் பேசிக் கொண்டே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் எங்கே செல்கிறோம் என்று தெரியாமலே அப்பொழுது 
  
  ஒரு ஒற்றையடிப் பாதை தெரிந்தது அதை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி எல்லோரின் மனதிலும் ,இங்கு யாரோ இருக்கிறார்கள் அவர்களிடம் சென்றால் கட்டாயம் வழிகிடைக்கும் என்று அந்த பாதை  வழியாக நடக்க ஆரம்பித்தனர் இருட்ட ஆரம்பித்தது ஏற்க்கனவே மரங்கள் அடர்ந்து இருந்ததால் வெளிச்சம் குறைவாக தான் இருந்தது ,இருட்டு அதிகமானதால் பாதையை  தவிர ஒன்றுமே கண்களுக்கு தெரியவில்லை வேகமாக நடந்தனர் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே சென்றது .
  
அப்பொழுது அந்த வழியில் இவர்களை பார்த்துக் கொண்டு ......................?
      
 இன்னும் திகில் தொடரும் ..............என்ன படித்துவிட்டீர்களா ? தயவு செய்து உங்கள் கருத்துக் களையும் ஓட்டுகளையும் மறவாமல் அளித்து செல்லுங்கள் 
 
    

      

10 comments:

  1. உங்கள் ஆதரவுகளோடு இன்னும் புதிய அன்பவங்கள்............

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக இருக்கிறது தொடருங்கள்

    ReplyDelete
  3. மிகவும் அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  4. மிக்க நன்றி @rk guru

    ReplyDelete
  5. அருமை,அருமை,அருமை

    ReplyDelete
  6. mikavum arumai ithan thodarchiyai viraivil veliyidunkal

    ReplyDelete
  7. திக்...திக்..திக்....

    அடுத்து.....?????? வெயிட்டிங்...........

    ReplyDelete
  8. திகில்....தொடருங்கள்..

    ReplyDelete
  9. //கடவுளை நேரில் பார்ப்பது அன்பினால் மட்டுமே ,முதல் அன்பு முதல் கடவுள் எல்லாமே தாய்//

    உண்மையான வரிகள். உங்கள் படைப்புகள் அருமை

    ReplyDelete
  10. அனைவருக்கும் நன்றி.........

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...