Friday, November 5, 2010

ஐயோ இது உண்மையா ?

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர் 
    அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர் 
      அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருவத்து ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று 
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது 
    அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது 
  
  இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
    
        காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது  அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............ 
   இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டுகளையும் அளியுங்கள் ....................மீண்டும் அடுத்த பதிவில் 

3 comments:

  1. இது பலருக்கும் அனுபவமாக இருக்கும்......

    ReplyDelete
  2. நல்லாருக்கு!தீவாளியும் அதுவுமா நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய!!!!!!!

    ReplyDelete
  3. இந்த பதிவின் அடுத்த பாகம் தொடரும்............

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...