Wednesday, November 3, 2010

என்று தணியும் இந்த தீ ?



   ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது உடனே அக்குழந்தையின் தாய் பாட்டிலில் ஊற்றி வைத்திருந்த பாலை எடுத்து அதற்க்கு புகட்டுகிறாள்,அதுவும் பசி அடங்கி மீண்டும் தூங்கிவிடுகிறது சரி இந்த பால் எந்த சாதி மாட்டில் இருந்து கறக்கப்பட்டது ,அது எந்த சாதிக்காரன் கையால் கறக்கப்பட்டது அது எந்த சாதிக்காரன் கையால் பாக்கெட் செய்யப்பட்டது ,அது எந்த சாதிக்காரன் கையால் விற்க்கப்பட்டு அது அந்த தாயின் கைக்கு வந்து சேர்ந்தது இது எதுவுமே தெரியாமலே பால் புகட்டி குழந்தை தூங்கிவிட்டது


                ஒரு உணவு விடுதிக்கு செல்கிறோம் ,அங்கு சமையல் செய்பவன் எந்த சாதி,அதை பரிமாறுகிறவன் எந்த சாதி என்று தெரியாது,ஆனால் உணவை சுவைத்து உண்ணுவோம்,அவன் கைகளால் செய்யப்பட்ட உணவு ருசிக்கிறது அவன் தொட்டுவிட்டால் கசக்கிறது இது என்ன நியாயம்
     
  மதம் 
         இது வழிபாட்டில் தான் வேறுபடுகிறதே தவிற கொள்கைகள் எல்லாம் ஒன்றே ,எந்த மதத்திலும் மற்ற மதத்தவரை மதம் மாற்றவேண்டும் என்றோ,துன்புறுத்த வேண்டுமென்றோ,இதற்க்காக கொல்ல வேண்டுமென்றோ சொல்லவில்லை ஒவ்வொரு மதமும் அன்பையே போதிக்கிறது,ஒவ்வொரு உயிரையும் நேசிக்கவே போதிக்கிறது,யார் இந்த பாகுபாட்டை உறுவாக்கினார்கள் மதம் என்ற போர்வையிலும் சாதி என்ற போர்வையிலும் தன் குடும்பத்தைக் ஆடம்பரமாக வாழ வைக்க ஆசைப்பட்டவர்கள் உறுவாக்கியதே இவைகள் அத்தனையும் இதை ஒரு நிமிடம் பொருமையாக யோசித்து பாருங்கள் உண்மை புரியும்

        சரி இந்த சாதியின் பெயரால் உனக்கு கிடைத்த இலாபம் என்ன ? உனக்கு உன்ன உணவு கொடுக்கிறதா?உனக்கு நோய் வந்தால் உனக்கு மருந்தாகப் பயன்படுகிறதா?உன் குடும்பத்திற்க்கு உடுத்த உடை கொடுக்கிறதா?உன் குழந்தையின் பசியாற்ற பால் கொடுக்கிறதா?இல்லை கல்வி தான் கொடுக்கிறதா ?உன் வாழ் நாள் முழுவதும் உனக்கு தேவையான செல்வத்தை தான் கொடுக்கிறதா ?என்ன தான் கொடுக்கிறது உன் சாதி .


     நீ எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் , எந்த சாதியை சார்ந்தவனாக இருந்தாலும் உன் முயற்சியாலும் உன் உழைப்பாலும் மட்டுமே உன் குடும்பத்தை காப்பாற்ற முடியும். சாதி மதம் என்பது ஒரு மனிதனின் ஒழுக்கத்தை வரைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டவையே.


     எந்த ஒரு உயிரினத்தை துன்புறுத்தவோ அழிக்கவோ எந்த ஒரு மதமும் போதிக்கவில்லை. இது ஒரு நிதர்சனமான உண்மை. 

     இந்த பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் ஓட்டுகளையும் தவறாமல் அளியுங்கள்.

4 comments:

  1. உண்மையிலேயே இந்த தீ அனைந்தால் உலகமே அமைதி பூங்காவாகிவிடும்

    ReplyDelete
  2. //சாதி மதம் என்பது ஒரு மனிதனின் ஒழுக்கத்தை வரைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டவையே.
    //

    arumai . pakirvukku nanri.

    ReplyDelete
  3. very beautiful thinking keep it

    ReplyDelete

கடவுள் வாழும் வீடு . 4

                                                                    கடவுள் வாழும் வீடு . 4 இனிய வணக்கம்  அனைவருக்கும் ,    ((  நாம் ...